செரீனா வில்லியம்ஸ் ஜூலியா ஜோர்ஜெஸ் மோதல் | தினகரன்

செரீனா வில்லியம்ஸ் ஜூலியா ஜோர்ஜெஸ் மோதல்

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடரின் பெண்களுக்கான காலிறுதியில் செரீனா வில்லியம்ஸ் அசத்தல் வெற்றி பெற்றுள்ளார்.

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான காலிறுதி ஆட்டங்கள் நேற்றுமுன்தினம் நடைபெற்றன. 3-வது காலிறுதி ஆட்டத்தில் 25-ம் நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் தரநிலை பெறாத கமிலா ஜியார்ஜியை எதிர்கொண்டார்.

முதல் செட்டை ஜியார்ஜி 6 – 3 என எளிதில் கைப்பற்றினார். இதனால் செரீனாவிற்கு நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் 2-வது செட்டை 6 –3 என வீழ்த்தி அசத்தினார். பின்னர் வெற்றியை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி செட்டிலும் அசத்தினார். அந்த செட்டை 6 – 4 எனக் கைப்பற்றி வெற்றியை ருசித்தார்.

கடைசி காலிறுதி ஆட்டத்தில் 13-ம் நிலை வீராங்கனையான ஜோர்ஜஸ் 20-ம் நிலை வீராங்கனையான கிகி பெர்டென்ஸ்-ஐ எதிர்கொண்டார். முதல் செட்டை ஜூலியா 3 – 6 என இழந்தார். ஆனால் 2-வது செட்டை கடும் போராட்டத்திற்குப் பின் 7 – 5 எனக் கைப்பற்றினார்.

பின்னர் 3 ஆவது செட்டை 6 – 1 என எளிதாக கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார். ஜூலியா ஜோர்ஜெஸ் அரையிறுதில் செரீனா வில்லியம்ஸை எதிர்கொள்கிறார்.


Add new comment

Or log in with...