மூன்று கிலோ தங்கத்துடன் இந்திய பிரஜை கைது | தினகரன்

மூன்று கிலோ தங்கத்துடன் இந்திய பிரஜை கைது

ஒரு கோடியே 90 இலட்சம் பெறுமதி

சுமார் 1 கோடியே 90 இலட்சத்து 82,630 ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுகள் , நகைகளை இலங்கைக்குக் கடத்திவந்த இந்தியப் பிரஜை ஒருவரை நேற்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கேரள மாநிலத்தைச் சேர்ந்த 32 வயதான இந்த நபர் ‘ஹைட்றோலிக் வாகன ஜெக்’ குக்குள் மறைத்து வைத்தே இந்தத் தங்கத்தை இந்தியாவிலிருந்து கடத்தி வந்துள்ளார்.

அவர் நேற்றைய தினம் அதிகாலை டுபாயிலிருந்து புறப்பட்டுள்ள யூ. எல். 232 விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார் . எந்த சோதனையும் இன்றி அவர் விமான நிலையத்திலிருந்து வெளியேற முயல்கையில் சுங்க அதிகாரிகள் , அவரது பயணப் பைக்குள் இருந்த வாகன ஜெக்கிலிருந்த ஒரு தொகை தங்கத்தை கைப்பற்றியுள்ளனர்.

பயணப் பைக்குள் மூன்று கிலோ மற்றும் 13 கிராம் நிறையுடைய தங்கக் கட்டிகள் மற்றும் தங்க நகைகள் இருந்ததாகவும் இதன் பெறுமதி ஒரு கோடியே 90 இலட்சத்து எண்பத்திரெண்டாயிரம் ரூபா என்றும் சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...