Thursday, July 12, 2018 - 17:03
நாட்டிலும், நாட்டைச் சூழவுள்ள கடல் பிரதேசத்திலும் காற்றின் வேகம் அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுவதாக வளி மண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், இந்நிலை தொடர்ந்தும் சில நாட்களுக்கு நீடிக்கும் எனவும் திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது.
நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வட மேல் மற்றும் தென் மாகாணங்களில் இடைக்கிடை மழை பெய்யும் எனவும், ஏனைய பிரதேசங்களில் ஓரளவு மழை பெய்யலாம் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் இடைக்கிடை, மணிக்கு 50 - 60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
Add new comment