மணிப்பூரில் கனமழை காரணமாக நிலச்சரிவு: 9 பேர் உயிரிழப்பு; பலர் படுகாயம்; வீடுகள் பலத்த சேதம் | தினகரன்

மணிப்பூரில் கனமழை காரணமாக நிலச்சரிவு: 9 பேர் உயிரிழப்பு; பலர் படுகாயம்; வீடுகள் பலத்த சேதம்

மணிப்பூர் மாநிலம் டேமங்லங் நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. கோஹிமா- திமாப்பூர் சாலை ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். நிலச்சரிவில் சில வீடுகளும் சேதம் அடைந்தன. சம்பவ இடத்திற்கு மீட்பு குழுவினர் விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

கனமழை காரணமாக மீட்பு பணி மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. கடினமான சூழ்நிலையிலும் மீட்புக்குழுவினர் தீவிரமாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு மணிப்பூர் முதல்வர் நொங்தொம்பம் பிரென் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்க உத்தரவிட்டார்.

காயமடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.


Add new comment

Or log in with...