இராட்சத டைனோசர் எச்சம் கண்டுபிடிப்பு | தினகரன்

இராட்சத டைனோசர் எச்சம் கண்டுபிடிப்பு

முன்னர் அறியப்பட்டதை விடவும் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உயிர்வாழ்ந்த இராட்சத டைனோசர் எச்சங்கள் ஆர்ஜன்டீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இங்கேனியா ப்ரிமான என்ற இந்த டைனோசர் அந்த காலத்தில் வாழ்ந்த மிகப்பெரிய டிராசிக் டைனோசர்களை விடவும் மூன்று மடங்கும் பெரியதாகும். ஆர்ஜன்டீன தலைநகர் பூனோஸ் ஏர்ஸில் இருந்து மேற்காக 1,100 கிலோமீற்றர் தூரத்தில் இருக்கும் சான் ஜீவான் மாகாணத்தில் பேல்ட் டி லெயெஸ் அகழ்வு தளத்தில் இருந்தே இந்த டைனோசர் எச்சம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த டைனோசர் சுமார் 33 அடி நீளம், 14 அடி உயர் மற்றும் 10 தொன் எடை கொண்டதாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளர். டிராசிக் காலத்தில் வாழ்ந்த டைனோசர்கள் சிறியதாக இருந்ததாகவே ஆய்வாளர்கள் இதுவரை நம்பி வந்தனர். சுமார் 180 ஆண்டுகளுக்கு முந்தைய ஜுராசிக் காலத்திலேயே டைனோசர்கள் இராட்சத வடிவம் பெற்றதாக இந்த கண்டுபிடிப்புக்கு முன்னர் ஆய்வாளர்கள் நம்பி இருந்தனர்.


Add new comment

Or log in with...