பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் இராஜினாமா | தினகரன்

பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் இராஜினாமா

பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் பொரிஸ் ஜோன்சன் ராஜினாமா செய்ததை அடுத்து அந்த பதவிக்கு ஜெரமி ஹண்ட் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் முன்னர் சுகாதார அமைச்சராகப் பொறுப்பு வகித்து வந்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பில், பிரதமர் தெரேசா மே கொண்டுள்ள திட்டத்துக்கு எதிர்ப்பு வெளியிட்டே ஜோன்சன் இந்த திடீர் முடிவை எடுத்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது குறித்த விவகாரங்களுக்குப் பொறுப்பு வகித்த அமைச்சர் டேவிட் டேவிஸ் பொறுப்பில் இருந்து விலகிய சில மணிநேரத்தில், ஜோன்சன் தமது பதவி விலகலை அறிவித்தார்.

அண்மைய பதவி விலகல் சம்பவங்கள், பிரதமர் மேயின் அரசாங்கத்துக்கும் அவரது பதவிக்கும் பாதகமாக அமையலாம் என்று பரவலாகக் கூறப்படுகிறது.


Add new comment

Or log in with...