பிரேசில் கால்பந்து அணியினர் சென்ற பஸ் மீது கல்வீச்சு | தினகரன்

பிரேசில் கால்பந்து அணியினர் சென்ற பஸ் மீது கல்வீச்சு

உலக கிண்ண கால்பந்து போட்டியின் கால்இறுதி ஆட்டத்தில் பிரேசில் அணி தோல்வியடைந்ததை அடுத்து அந்நாட்டு ரசிகர்கள், வீரர்கள் சென்ற பஸ் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

உலக கிண்ண கால்பந்து போட்டியில் 5 முறை சம்பியனான பிரேசில் அணி கால்இறுதி ஆட்டத்தில் 1-−2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் தோல்வி கண்டு வெளியேறியது. இதனால் அந்த நாட்டு இரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர். இந்த நிலையில் பிரேசில் கால்பந்து அணி நாடு திரும்பியது.

விமான நிலையத்தில் இருந்து வீரர்கள் தனி பஸ்சில் செல்வதை அறிந்த ரசிகர்கள் அந்த பஸ்சை சூழ்ந்து கொண்டு, முட்டை மற்றும் கற்களை வீசி தாக்கினார்கள். ரசிகர்களின் ஆக்ரோஷ தாக்குதல் அதிகமானதை தொடர்ந்து பொலிசார் துப்பாக்கி சூடு நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.


Add new comment

Or log in with...