சிங்கராஜாவிலுள்ள இரு யானைகளையும் பாதுகாக்க தடுப்பு மத்திய நிலையம் | தினகரன்

சிங்கராஜாவிலுள்ள இரு யானைகளையும் பாதுகாக்க தடுப்பு மத்திய நிலையம்

சிங்கராஜாவிலுள்ள இரு யானைகளையும் பாதுகாக்க தடுப்பு மத்திய நிலையம்-Detention Center for Sinharaja Elephants-Cabinet Approved

 

உலக மரபுரிமையான சிங்கராஜா பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் தற்போது எஞ்சியுள்ள இரண்டு யானைகளையும் பாதுகாக்கும் பொருட்டு அங்கு யானை தடுப்பு மத்திய நிலையம் ஒன்றை அமைச்ச அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

குறித்த யானைகளினால் வனப் பகுதிக்கு அருகாமையில் வாழும் கிராம மக்களுக்கு ஏற்படும் உயிர் அச்சுறுத்தல் மற்றும் சொத்துக்களுக்கான சேதங்கள் படிப்படியாக அதிகரித்துள்ளன.

இதன் அடிப்படையில் யானைகளின் பாதுகாப்பு மற்றும் கிராம மக்களின் வாழ்க்கை மற்றும் சொத்துக்களின் பாதுகாப்புக்கென துரிதமான நடவடிக்கை மேற்கொள்ளுவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

அதன் அடிப்படையில் அங்குள்ள இரண்டு யானைகளுக்குமாக தடுப்பு மத்திய நிலையம் ஒன்றை நிர்மாணிப்பதற்கும் யானைகள் வாழ்வதற்கு உகந்த சூழலைக் கொண்ட, களவான தொலேகந்த கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பாருகல பிரதேசத்திலுள்ள சுமார் 36 ஹெக்ட்டர் நிலப்பரப்பை பெற்றுக் கொள்ளும் பொருட்டு, நிலைபேறு அபிவிருத்தி வனவிலங்குகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 


Add new comment

Or log in with...