Friday, April 19, 2024
Home » பாரம்பரியம் நிகழ்ச்சியில் இன்று பக்கீர் பைத் நினைவுகள்

பாரம்பரியம் நிகழ்ச்சியில் இன்று பக்கீர் பைத் நினைவுகள்

by damith
November 21, 2023 11:07 am 0 comment

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் இன்று செவ்வாய்க்கிழமை (21) இரவு 8.15 மணியளவில் ஒலிபரப்பாகும் பாரம்பரியம் நிகழ்ச்சித் தொடரில், முஸ்லிம் சமூக கலை, கலாசார அம்சங்களில் ஒன்றான “பக்கீர் பைத்” பாரம்பரிய நினைவுகள் பரிமாறப்படவிருக்கின்றன.

ஆரம்ப நாட்களில் அவ்வப்போது இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சிகளில் பக்கீர்பைத் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகி வந்தன. 1980 களில், இக்கலையை கண்ணியப்படுத்தும் நோக்கில் இலங்கை வானொலி முஸ்லிம் சேவை போதுமான களம் கொடுத்து வளர்த்து வந்தது. புத்தளம், மன்னார், கிழக்கு மாகாணம் போன்ற பிரதேசங்களில் வாழும் பக்கீர் பைத் பாடிவந்த பாவாக்களை, நிலைய கலையகம் அழைத்து, அவர்களைப் பாடவைத்து பக்கீர் நிகழ்ச்சிகளை தொடராக முஸ்லிம் சேவை ஒலிபரப்பியிருக்கிறது. இன்று அவர்களில் அதிகமானோர் நம்மில் இல்லை. அதே நேரம் அக்கலை தொடராது, அருகி போனமை துரதிர்ஷ்டமே.

அந்நாட்களில் முஸ்லிம் சேவையில் பக்கீர்பைத் பாடிய பாவாக்களில் ஒருவரான, அக்கரைப்பற்று மர்ஹூம் பீ.எம். ஜமால்தீன் கலீபா பாவா அவர்களின் நினைவுகளை அவரது புதல்வர் நஜ்முல் ஹுசைன் தீன் பாவா, நினைவுகூருகிறார். அத்தோடு, இன்றைய நிகழ்ச்சியில், கொழும்பு திறந்த பல்கலைக்கழக முன்னாள் கல்வி பீடாதிபதி, அகில இலங்கை முஸ்லிம் பக்கீர் ஜமாத்தின் தலைவர் அல்ஹாஜ் பீ.சீ. பகீர் ஜவ்பர், பக்கீர் பைத் பாரம்பரிய வரலாறுகளையும், பகிர்ந்து கொள்கிறார்.

இந்நிகழ்ச்சியினை எம்.எஸ்.எம். ஜின்னா தொகுத்தளிக்க, முஸ்லிம் சேவை பணிப்பாளர் பாத்திமா ரினூஸியா தயாரித்தளிக்கிறார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT