எரிபொருட்களின் விலைகள் நள்ளிரவு முதல் அதிகரிப்பு | தினகரன்

எரிபொருட்களின் விலைகள் நள்ளிரவு முதல் அதிகரிப்பு

பெற்றோலிய கூட்டுத்தாபனம்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் விநியோகிக்கப்படும் எரிபொருட்களின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை தொடர்பாக இறுதி தீர்மானம் ஒன்றை மேற்கொள்வது தொடர்பில் நிதியமைச்சர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு இடையில் நேற்று மாலை இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் 92 ஒக்ேடன் பெற்றோலின் விலை 8 ரூபாவாலும், 95 ஒக்ேடன் பெற்றோலின் விலை 7 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது தவிர டீசல் லீற்றர் ஒன்றின் விலை 9 ரூபாவாலும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்தது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் லங்கா ஐஓசி நிறுவனமும் என்பன கடந்த வெள்ளிக்கிழமை எரிபொருட்களின் விலைகளை அதிகரித்தது. ஆனால் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விலை அதிகரிப்பை மறுநாள் வாபஸ் பெற்றுக் கொண்டதோடு முன்னைய விலையிலேயே எரிபொருட்களை விநியோகிக்க தீர்மானித்திருந்தது.

இதற்கமைய தற்காலிகமாக இடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் விலைகளே நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எரிபொருட்களின் விலை தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை விசேட அமைச்சர்கள் கூட்டம் நடந்தது. இதன் போது முன்பு அறிவித்த விலைகளுக்கு மீண்டும் எரிபொருள் விலைகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.மாதாந்தம் 10 ஆம் திகதி கூடி எரிபொருள் விலைகளை மறுசீரமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.(பா)

 


Add new comment

Or log in with...