தாய்லாந்து குகை மீட்புப் பணி; 8 மணி நேரத்தில் தயாரான குட்டி நீர்மூழ்கி! | தினகரன்

தாய்லாந்து குகை மீட்புப் பணி; 8 மணி நேரத்தில் தயாரான குட்டி நீர்மூழ்கி!

தாய்லாந்து குகைக்குள் சிக்கியவர்களில் எஞ்சிய சிறுவர்களை மீட்க, 'எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் மூலம் சிறிய நீர்முழ்கிக் கப்பல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குட்டி நீர்மூழ்கிக் கப்பல் எட்டு மணி நேரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து குகைக்குள் சிக்கியவர்களில் 13 பேரில் நேற்று வரை 8 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். கடந்த 16 நாட்களாக அவர்கள் உள்ளேயே இருக்கிறார்கள். கடந்த வாரம்தான் அவர்கள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது முதற்கட்ட மீட்புப் பணி வெற்றிகரமாக முடிந்து இரண்டாம் கட்ட மீட்பு பணி தொடங்கியுள்ளது.

இதற்காக அமெரிக்காவின் எலோன் மஸ்க் என்பவர் களத்தில் குதித்து இருக்கிறார். 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் தலைவரான இவர்தான் தன்னுடைய டெஸ்லா நிறுவன காரை செவ்வாய் கிரகத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு அனுப்பினார்.

மீட்புக் குழு இருக்கும் இடத்தில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டார் தூரத்தில் உள்ள இடத்தில்தான் சிறுவர்கள் ேநற்றுப் பிற்பகல் இருந்தனர். அவர்கள் இந்த இடத்தை அடைய மிகவும் குறுகலான பகுதியைத் தாண்டி வர சுமந்து செல்லும் வகையில், மிக சிறிய நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்கி இருக்கிறார். குட்டி நீர்மூழ்கிக் கப்பலுக்குள் இருந்தபடி ஒவ்வொருவராக வெளியே பாதுகாப்பாக வர முடியும்.இதை வெளியில் இருந்தும் இயக்க முடியும். இது முழுக்க தானாக இயங்கும் திறனும் கொண்டுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் ​ெராக்கெட்டுகளில் ஒன்றான, பல்கான் ஹெவி ​ெராக்கெட் மூலம் இது உருவாக்கப்பட்டுள்ளது.

இதை குறுகலான, குகையின் பாதைக்குள் அனுப்ப திட்டமிட்டுள்ளனர். அதன்படி, உள்ளே ஒக்சிஜன் சிலிண்டர்களை அனுப்ப முடியும். இது நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

இதனை தாய்லாந்து கொண்டு செல்ல துரித ஏற்பாடுகள் நேற்று செய்யப்பட்டன.

உலகின் மிக முக்கியமான புத்திசாலிகளில் ஒருவர் என்று எலோன் மஸ்க் கருதப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவர் தன்னுடைய அலுவலகத்தில் வேலை பார்க்கும் பொறியியலாளர்களை தாய்லாந்துக்கு அனுப்பியுள்ளார். குகையின் சில இடங்களில் துளையிட வேண்டியுள்ளதால் அவர்கள் தாய்லாந்துக்கு வந்துள்ளனர்.

விண்வெளி வீரர்களையும் அவர் இந்தப் பணிக்கு அனுப்பி இருக்கிறார். அவர்கள் எவ்வளவு ஆழமான நீரிலும், மோசமான காலநிலையில் உயிருடன் இருக்க பயிற்சி எடுத்தவர்கள். இவர்கள் எளிதாக சிறுவர்களை காப்பாற்றுவார்கள் என்பதால் அவர்களை அனுப்பி இருக்கிறார்.

 


Add new comment

Or log in with...