Friday, March 29, 2024
Home » ஆர்ஜென்டீன ஜனாதிபதியாக வெற்றிபெற்றார் ஜேவியர் மிலி

ஆர்ஜென்டீன ஜனாதிபதியாக வெற்றிபெற்றார் ஜேவியர் மிலி

by damith
November 21, 2023 11:19 am 0 comment

ஆர்ஜென்டீன ஜனாதிபதி தேர்தலின் இரண்டாம் சுற்று வாக்கெடுப்பில் வினோதமான மற்றும் அதிரடி திட்டங்களை அறிவித்த தீவிர வலதுசாரி சுயாதீனவாதியான ஜேவியர் மிலி வெற்றியீட்டியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்ற தேர்தலில் 95 வீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் 56 வீதமான வாக்குகளை வென்று மிலி, பொருளாதார அமைச்சர் செர்கியோ மசாவை தோற்கடித்துள்ளார்.

அரசியல் கட்டமைப்புக்கு எதிரானவராகவும், ஆத்திரமூட்டும் சொல்லாட்சிகளை பயன்படுத்துபவராகவும், ஆக்ரோசமாக பேசக்கூடியவருவமான மிலி, நாட்டின் பொருளாதாரத்தை டொலரில் மாற்றுவதற்கும், மத்திய வங்கியை மூடுவதற்கும், 140 வீதத்திற்கு மேல் இருக்கும் பண வீக்கத்தை குறைக்க பொதுச் செலவுகளை பாரிய அளவில் குறைப்பதற்கும் வாக்குறுதி அளித்துள்ளார்.

முன்னாள் தொலைக்காட்சி பிரபலமான மிலியின் வாக்குறுதிகள் ஆளும் கட்சி மீது அதிருப்தியில் உள்ள பெரும்பான்மை ஆர்ஜென்டீன மக்களை கவர்ந்துள்ளது.

இந்நிலையில் அல்பார்டோ பெர்னாண்டஸுக்கு பதில் ஜேவியர் மிலி எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதி ஆர்ஜென்டீனாவின் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்கவுள்ளார்.

வினோத வாக்குறுதிகளுடன்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT