இலஞ்சம்; கல்குடா பொலிஸ் நிர்வாக பிரிவு OIC கைது | தினகரன்

இலஞ்சம்; கல்குடா பொலிஸ் நிர்வாக பிரிவு OIC கைது

இலஞ்சம்; கல்குடா பொலிஸ் நிர்வாக பிரிவு OIC கைது-Bribe-Kalkudah Police OIC Admin Arrested

 

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், கல்குடா பொலிஸ் நிலைய நிர்வாக பிரிவு பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (10) காலை, வாழைச்சேனை - கோரளைப்பற்று பிரதேச சபையில் வைத்து, ரூபா 3 இலட்சம் பணத்தை இலஞ்சமாக பெற்றபோது, குறித்த பொலிசாரை, இலஞ்ச ஊழல் விசாரணை பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வியாங்கொட, கல்குடா பிரதேசத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள, செங்கல் கைத்தொழிற்சாலைக்கான, மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் மதிப்பீட்டு அறிக்கைக்காக, பொலிசாரினால் அறிக்கையொன்று வழங்கப்பட வேண்டும் என்பதோடு, குறித்த அறிக்கையை வழங்குவதற்காக, கல்குடா பொலிஸ் நிலைய நிர்வாக பிரிவு பொறுப்பதிகாரியினால், தொழிற்சாலையை ஆரம்பிக்கவுள்ளவரிடமிருந்து இலஞ்சமாக ரூபா 5 இலட்சம் பணம் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பணத்தில், ரூபா 3 இலட்சத்தை இன்றைய தினம் (10) முற்பணமாக பெற்றுக் கொள்ளும்போதே அவரை இலஞ்ச ஊழல் விசாரணை பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

 


Add new comment

Or log in with...