மஹானாம, திஸாநாயக்கவுக்கு ஜூலை 13 வரை விளக்கமறியல் | தினகரன்

மஹானாம, திஸாநாயக்கவுக்கு ஜூலை 13 வரை விளக்கமறியல்

மஹானாம, திஸாநாயக்கவுக்கு ஜூலை 13 வரை விளக்கமறியல்-IK-Mahanama-P-Dissanayake-Further-Remanded

 

இலஞ்ச குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி ​செயலகத்தின் முன்னாள் பிரதானி பேராசியர் ஐ.எச்.கே மஹானாம மற்றும் அரச மர கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பி. திஸாநாயக்க ஆகியோருக்கு எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரும் இன்று (10) கொழும்பு பிரதான நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

சந்தேகநபர்கள் இருவரும், கந்தளாய் சீனி தொழிற்சாலைக்குச் சொந்தமான இரும்பு தொகுதிகளை இந்திய நிறுவனம் ஒன்றிற்கு வழங்குவது தொடர்பில் அந்நிறுவனத்திடமிருந்து ரூபா 54 கோடி இலஞ்சம் கோரியதாகவும், அதற்கான முற்பணமான ரூபா 2 கோடியை கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வைத்து பெற்றுக் கொள்ள முற்பட்ட வேளையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கடந்த மே 03 ஆம் திகதி கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் விளக்கறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கு தொடர்பில், சந்தேகநபர்களால் முன்வைக்கப்பட்ட பிணை மனுவை கடந்த ஜூன் 26 ஆம் திகதி இடம்பெற்ற அமர்வில் நிராகரித்த நீதவான், அவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார் என்பதோடு, சந்தேகநபர்கள் பெற்றுக்கொண்டுள்ள இலஞ்சத்தின் அளவு மிகப் பாரிய அளவில் காணப்படுவதால், வழக்கு முடியும் வரை அவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைப்பதற்கு நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக, அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...