சிங்கள பாடகி, கணவரால் கொலை | தினகரன்

சிங்கள பாடகி, கணவரால் கொலை

சிங்கள பாடகி, கணவரால் கொலை-Sinhala Singer-Priyani Jayasinghe Murder-Husband Arrested

 

சிங்கள பாடகியான, பிரியானி ஜயசிங்க கொலை செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை - குடாஅருக்கொட பிரதேசத்திலுள்ள தனது வீட்டில் வைத்து, 51 வயதான பிரியானி ஜயசிங்க இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (08) இரவு 8.45 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த கொலையை அவரது கணவர் மேற்கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இதற்காக வீட்டிலிருந்த கத்தரிக்கோல் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த ஒரு வருட காலமாக இருவருக்கிடையிலும் அடிக்கடி பிரச்சினை எழுந்து வந்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் நேற்று (08) இரவு முதல் தலைமறைவாகியிருந்த நிலையில், பொலிசார் மேற்கொண்ட தேடுதலில் இன்று (09) காலை பாணந்துறை, புகையிரத நிலையத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


Add new comment

Or log in with...