ஆண்டிவால் வீதி துப்பாக்கிச்சூட்டில் மாநகர சபை உறுப்பினர் பலி | தினகரன்

ஆண்டிவால் வீதி துப்பாக்கிச்சூட்டில் மாநகர சபை உறுப்பினர் பலி

ஆண்டிவால் வீதி துப்பாக்கிச்சூட்டில் மாநகர சபை உறுப்பினர் பலி-

 

கொழும்பு 13, புறக்கோட்டை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இன்று (09) காலை செட்டியார் தெரு - ஆண்டிவால் வீதிக்கு திரும்பும் சந்திக்கு அருகிலுள்ள பழக்கடை ஒன்றினுள் இத்துப்பாக்கிச்சூட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதில், கொழும்பு மாநகர சபையின் (சுயேட்சைக் குழு) உறுப்பினரான 'கிருஷ்ணா' என அழைக்கப்படும் கிருஷ்ணபிள்ளை கிருபானந்தன் என்பவர் பலியாகியுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகநபர், பழக்கடையில் இருந்த மாநகர சபை உறுப்பினர் மீது துப்பாக்கிச்சூடு நிகழ்த்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புறக்கோட்டை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


Add new comment

Or log in with...