ரூபா 124 கோடி ஹெரோயின் மீட்பு; இருவர் கைது | தினகரன்

ரூபா 124 கோடி ஹெரோயின் மீட்பு; இருவர் கைது

ரூபா 124 கோடி ஹெரோயின் மீட்பு; இருவர் கைது-Rs. 1248 million worth 103kg Heroin Seized
(வைப்பக படம்)

 

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது, ரூபா 124.8 கோடி பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

களுபோவில மற்றும் பத்தரமுல்ல - சுபுதிபுர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட குறித்த சுற்றிவளைப்பில் 96 பொதிகளில் காணப்பட்ட 103 கிலோ கிராமிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சந்தேகநபர்கள் இருவரை கைது செய்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

 


Add new comment

Or log in with...