லக்கி ஜயவர்தன, அளவத்துவலவின் அமைச்சு பொறுப்புகளில் மாற்றம் | தினகரன்

லக்கி ஜயவர்தன, அளவத்துவலவின் அமைச்சு பொறுப்புகளில் மாற்றம்

லக்கி ஜயவர்தன, அளவத்துவலவின் அமைச்சு பொறுப்புகளில் மாற்றம்-Lucky Jayawardene-JC Alawathuwala Portfolio Changed
லக்கி ஜயவர்தன, ஜே.சி. அளவத்துவல

 

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான பிரதியமைச்சர் ஜே.சி. அளவத்துவல மற்றும் லக்கி ஜயவர்தன ஆகியோரின் அமைச்சுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

உள்நாட்டு அலுவல்கள் பிரதியமைச்சர் ஜே.சி. அளவத்துவல, உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரான லக்கி ஜயவர்தன, அப்பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டு நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இருவரும் இன்று (10) ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

ஜே.சி. அளவத்துவல ஐ.தே.கவின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்பதோடு, லக்கி ஜயவர்தன ஐ.தே.கவின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராவார்.

 


Add new comment

Or log in with...