அம்பாறை, தி'மலை உள்ளிட்ட பகுதிகளில் கடும் காற்று! | தினகரன்

அம்பாறை, தி'மலை உள்ளிட்ட பகுதிகளில் கடும் காற்று!

அம்பாறை, தி'மலை உள்ளிட்ட பகுதிகளில் கடும் காற்று!-Gusty Weather including Ampara Trincomalee

 

நாட்டின் பல பகுதிகளிலும் மழை

நாட்டினுள் நிலவும் காற்று வீசும் நிலை தொடர்ந்தும் நீடிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, நாட்டின் ஊடாக, விசேடமாக நாட்டின் மத்திய, வடக்கு, வட மத்திய, ஊவா, வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, அம்பாறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் காற்றின் வேகம் இடைக்கிடை மணிக்கு 50 - 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் மிக பலமாக வீசும் வாய்ப்பு காணப்படுவதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வட மேல், தென் மாகாணங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும், வடமத்திய மாகாணத்தில் ஓரளவான மழை எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Add new comment

Or log in with...