இரு பயணிகள் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! | தினகரன்

இரு பயணிகள் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!

79 பேர் காயம்

தனியார் பஸ் வண்டிகள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பஸ் வண்டிகளின் சாரதிகள் இருவர் உள்ளிட்ட 79 பேர் பலத்த காயங்களுடன் பொல்கொல்ல, குருணாகல், மற்றும் கலேவெல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் பஸ் சாரதிகள் உள்ளிட்ட  ஏழு பேருடைய நிலைமை மிகவும் கவலைக் கிடமானதாக வுள்ளதாக கொக்கரெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

குருநாகல்- _ தம்புள்ள பிரதான வீதியில், மெல்சிறிபுர நகருக்கு சமீபமாக பன்ளியத்த பிரதேசத்தில் வைத்து நேற்று (09) திங்கட்கிழமை பிற்பகல் 12.45 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

ஏம்பிலிபிட்டியிவிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த பஸ் வண்டியும், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ஒரே உரிமையாளருக்குச் சொந்தமான பயணிகள் பஸ் வண்டிகள் இரண்டுமே இவ்வாறு ஒன்றோடொன்று மோதி விபத்துக் குள்ளாகியுள்ளது.

கொக்கரெல்ல பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளைத் தொடர்ந்து மேற் கொண்டு வருகின்றனர்.

இவ் விபத்துச் சம்பவத்தை அடுத்து தம்புள்ள -குருநாகல் பிரதான வீதியில் வாகனப் போக்குவரத்துக்கள் யாவும் சுமார் ஒன்றரை மணி நேரம் ஸ்தம்பிதம் அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

(தம்புள்ள தினகரன் நிருபர்)

 

 


Add new comment

Or log in with...