தமிழகம், கேரளா, கர்நாடக எல்லையில் வலுவடையும் நக்சலைட் தீவிரவாதம்! | தினகரன்

தமிழகம், கேரளா, கர்நாடக எல்லையில் வலுவடையும் நக்சலைட் தீவிரவாதம்!

தமிழகம், - கேரளா, - கர்நாடகா மாநிலங்கள் இணையும் பகுதிகளில் நக்சலைட் அமைப்புகள் வலுப்பெறும் வாய்ப்புகள் உள்ளதாக கேரளா, கர்நாடகா மாநில பொலிசார் மற்றும் உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பிஜி கிருஷ்ணமூர்த்தி என்பவர் நக்சலைட் அமைப்புகளை வழிநடத்தி வருகிறார். விக்ரம் கவுடா என்பவர் ஆயுத உதவி செய்து வருகிறார். இவர்கள் கர்நாடகா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் இருந்து ஆட்களை தெரிவு செய்து மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில், கேரள பகுதிகளிலேயே செயல்பட விரும்புகின்றனர்.

இவ்வாறு நான்கு அமைப்புகள் செயல்படுகின்றன.

கேரளா, தமிழகம், கர்நாடகா மாநிலங்கள் இணையும் பகுதியை பாதுகாப்பான பகுதியாக அவர்கள் கருதுகின்றனர். இதனால், ஆந்திரா மற்றும் ஒரிசா பகுதிகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு வர முயற்சி செய்கின்றனர்.

தங்களை, ஆயுத ரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் வலுப்படுத்தி கொள்ள முயலும் நக்சலைட்டுகள் படிக்காத இளைஞர்களை தெரிவு செய்து அவர்களுக்கு தந்திர மற்றும் அரசியல் கல்வியை கற்றுக் கொடுக்கின்றனர்.

இது தொடர்பாக பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகையில், மாநில எல்லைகளில் பொலிஸ் பாதுகாப்பு குறைவாக இருக்கும்.

இதனால், அங்கு நக்சலைட்டுகள் நடமாடுவதில் பிரச்சினை இருக்காது.

இதனால் அங்கு உளவுத்துறையை வலுப்படுத்த வேண்டும். எதிராக தகவல் அளிப்பவர்களை நக்சல்கள் தாக்கும் அபாயம் உள்ளது எனத் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...