விஜயகலாவுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம் | தினகரன்


விஜயகலாவுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்

விஜயகலாவுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்-Vijayakala Maheswaran Inquiry

 

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், விடுதலைப்புலிகள் தொடர்பில் தெரிவித்த கருத்துகள் தொடர்பில், பொலிஸ் தலைமையத்திற்கு கிடைத்துள்ள முறைப்பாடு தொடர்பான விசாரணைகள், குற்ற விசாரணை பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குற்ற விசாரணை பிரிவின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் இன்று (04) தன்னை சந்தித்து விளக்கமளிக்குமாறு, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் தெரிவித்துள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இன்று (04) பிற்பகல் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின்போது, விசேட உரையொன்றை மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தற்போது காணப்படும் சட்டங்களுக்கு அமைய, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்து தொடர்பில், நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.

 


There is 1 Comment

we don't watch news daily ... but I feel the politicians should inform people in some way to do justice to this dead female letter we can deal with the LTTE issue ... It is secondary .. but That female politicians is promoting LTTE even before the death of this small kid .. I wonder what is going on .. Less people are concerned with news .. if something on Fb they will see .. but most people are so busy with lives .. I feel The sinhalese ministers should have initiated to find justice for this small 06 years old .. becasue if on of their daughter are dead .. They will feel .... If another child is dead . They will think of votes and come in front due to pressure of people and fame .. I wonder what will happen ..No more killings .. that should be the aim .. we could experience the death of children in North and south due to wars .. Long way to go towards peace .. It's most expensive thing in the world ..

Add new comment

Or log in with...