இராஜாங்க அமைச்சரின் தனிப்பட்ட கருத்தே தவிர ஐ.தே.கவின் கருத்தல்ல | தினகரன்

இராஜாங்க அமைச்சரின் தனிப்பட்ட கருத்தே தவிர ஐ.தே.கவின் கருத்தல்ல

வடக்கு மற்றும் கிழக்கில் எல்.ரீ.ரீ.ஈ அமைப்பை மீள உருவாக்குவதற்கான பாரிய தேவையிருப்பதாக இராஜாங்க அமைச்சர் விஜயகலா சுட்டிக்காட்டியிருப்பது அவருடைய தனிப்பட்ட கருத்தே தவிர ஐக்கிய தேசியக் கட்சியின் கருத்து அல்ல என்று அமைச்சர் ஹரீன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மஹேஸ்வரன் வெளியிட்டுள்ள கருத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஹரீன் பெர்னாண்டோ நேற்று கடும் விசனம் தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் விஜயகலாவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணையொன்று முன்னெடுக்கப்படுமென கட்சி தவிசாளர் அறிவித்திருப்பதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார். மேலும் எதனை உள்நோக்காகக் கொண்டு பாராளுமன்றத்தில் இவ்வாறானதொரு கருத்தை வெளியிட்டார் என்பது தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அவர் சிறிகொத்தவில் செய்தியாளர் மாநாடொன்றை நடத்துவாரென்றும் அமைச்சர் தெரிவித்தார். தெற்கிலுள்ள ஹிட்லர் மற்றும் வடக்கிலுள்ள பிரபாகரன் ஆகிய இருவருமே ஐக்கிய தேசியக் கட்சியால் மறுக்கப்பட்டவர்கள் என்றும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கூறினார்.


Add new comment

Or log in with...