63 வயது உகண்டா நாட்டவரிடம் 858 நீல மாணிக்கங்கள் மீட்பு | தினகரன்

63 வயது உகண்டா நாட்டவரிடம் 858 நீல மாணிக்கங்கள் மீட்பு

63 வயது உகண்டா நாட்டவரிடம் 858  நீல மாணிக்கங்கள் மீட்பு-63 Yr Old Ugandan Apprehended with 858 Blu Sapphire

பெறுமதி சுமார் ரூபா 80  இலட்சம்

உகண்டாவைச் சேர்ந்த 63 வயது நபர் ஒருவரிடமிருந்து 858 மாணிக்கக் கற்களை மீட்டுள்ளதாக, சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (30) காலை துபாயிலிருந்து கட்டுநாயக்கா விமானம் நிலையம் வந்த விமானத்தில் (EK 652) வந்த குறித்த நபரை சோதனையிட்டபோது, அவரிடமிருந்து சிறிய வகை 858 நீல மாணிக்கக்கற்கள் மீட்கப்பட்டதாக சுங்க திணைக்களத்தின் பணிப்பாளரும் ஊடக பேச்சாளருமான சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.

63 வயது உகண்டா நாட்டவரிடம் 858  நீல மாணிக்கங்கள் மீட்பு-63 Yr Old Ugandan Apprehended with 858 Blu Sapphire

சுங்க அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்ட குறித்த சந்தேகநபர், விசாரணைகளின் பின்னர் ரூபா 30 ஆயிரம் அபராதத் தொகை செலுத்துமாறு பணிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதோடு, மாணிக்கக் கற்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக, சுங்க திணைக்கள பணிப்பாளர் சுனில் ஜயரத்ன  தெரிவித்தார்.

63 வயது உகண்டா நாட்டவரிடம் 858  நீல மாணிக்கங்கள் மீட்பு-63 Yr Old Ugandan Apprehended with 858 Blu Sapphire

Add new comment

Or log in with...