சுழிபுரம் சிறுமி கொலை; 17, 18 வயதுடைய மேலும் இருவர் கைது | தினகரன்


சுழிபுரம் சிறுமி கொலை; 17, 18 வயதுடைய மேலும் இருவர் கைது

சுழிபுரம் சிறுமி கொலை; 17, 18 வயதுடைய மேலும் இருவர் கைது

 

யாழ்., சுழிபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த, ரெஜினா எனும் 06 வயதுச் சிறுமி, பாலியல் கொடுமையின் பின் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், அப்பகுதியைச் சேர்ந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை (26) சுழிபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, ஜூலை 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றைய தினம் (29) மேலும் இருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கைதானோர், காட்டுப்புலம், சுழிபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 17, 18 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

சந்தேகநபர்கள் இன்று (30) மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை (25), வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பபட்ட காட்டுப்புலம், சுழிபுரம் பிரதேசத்தில் குறித்த சிறுமி, அப்பகுதி தோட்டக் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை  (26) மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனையில் சிறுமி, வாய் மூல பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகியுள்ளதற்கான சான்றுகள் இருந்தமை தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறுமி ரெஜினாவுக்கு நீதி கோரி, குறித்த சம்பவம் தொடர்பில் பல்வேறு கண்டன பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில், வட்டுக்கோட்டை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


Add new comment

Or log in with...