பிரான்ஸ், உருகுவே, ரஷ்யா, குரோஷியா அணிகள் காலிறுதிக்கு தெரிவு | தினகரன்

பிரான்ஸ், உருகுவே, ரஷ்யா, குரோஷியா அணிகள் காலிறுதிக்கு தெரிவு

உருகுவே, பிரான்ஸ், ரஷ்யா, குரோஷியா அணிகள் காலிறுதிக்கு தெரிவு-France-Uruguay-Russia-Croatia to Quarter Final

 

போர்த்துக்கல், ஆஜென்டினா, ஸ்பெய்ன், டென்மார்க் வெளியேற்றம்

ரஷ்யாவில் இடம்பெற்று வரும் 2018 உலகக்க கிண்ணம் போட்டித் தொடரின் காலிறுதிப் போட்டிகளுக்கு இது வரை, உருகுவே, பிரான்ஸ், ரஷ்யா, குரோஷியா அணிகள் தெரிவாகியுள்ளன.

16 அணிகள் மோதும் நொக் அவுட் சுற்றில் வெற்றி பெற்ற இந்நான்கு அணிகளுமே இவ்வாறு காலிறுதி போட்டிக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த போட்டியில் தோல்வியுற்ற போர்த்துக்கல், ஆஜென்டினா, ஸ்பெய்ன், டென்மார்க் ஆகிய அணிகள் இத்தொடரிலிருந்து வெளியேறியுள்ளன.

அந்த வகையில் நேற்று (01) இடம்பெற்ற நொக் அவுட் சுற்றின் இரு போட்டிகளும் பெனால்டி முறையில் வெற்றி - தோல்வி தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நேற்று (01) ஸ்பெய்ன் - ரஷ்யா அணிகளுக்கிடையிலான போட்டி 1 - 1 என சமனிலை அடைந்ததை அடுத்து, இரண்டு மணித்தியாலங்கள் (120+2') வரை நீடித்த நிலையில் அப்போட்டி பெனால்டி முறையில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

இதில் 4 - 3 என ரஷ்யா வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது.

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற குரோஷியா - டென்மார்க் அணிகளுக்கிடையிலான போட்டியும் பெனால்டி முறையில் முடிவுக்கு வந்தது.

இரு அணிகளும் தலா ஒவ்வொரு கோலை அடித்த நிலையில், இரு மணி நேரங்கள் தொடர்ந்த (120+2') இப்போட்டியின் இறுதியில், பெனால்டி முறையில் 3 - 2 என குரோஷியா அணி வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.

குரோஷியா அணி கடந்த 1998 இல் அரையிறுதி வரை சென்று அதில் தோல்வியுற்று, மூன்றாம் அணியாக (3rd Place) வெளியேறியதற்கு பின்னர், 20 வருடங்கள் கழித்து காலிறுதிக்கு தற்போது காலிறுதிக்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இது வரை இடம்பெற்ற நொக் அவுட் சுற்றில் நான்கு அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளதோடு, நான்கு அணிகள் வெளியேற்றப்பட்டுள்ளன.

மேலும் நான்கு அணிகள் காலிறுதிக்கு தெரிவு செய்யப்படுவதற்கான நான்கு போட்டிகள் இடம்பெறவுள்ள நிலையில் இன்று (02) பிரேசில் - மெக்சிகோ மற்றும் பெல்ஜியம் - ஜப்பான் ஆகிய அணிகள் மோதுகின்றன.

நாளைய தினம் (03) நிறைவடையவுள்ள நொக் அவுட் சுற்றுக்கான இறுதிப் போட்டிகளில், சுவீடன் - சுவிற்சலாந்து மற்றும் கொலம்பியா - இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...