Thursday, March 28, 2024
Home » யாழில் 101 கிலோ 750 கிராம் கேரள கஞ்சா மீட்பு

யாழில் 101 கிலோ 750 கிராம் கேரள கஞ்சா மீட்பு

- பெறுமதி சுமார் ரூ. 3 கோடி என மதிப்பீடு

by Prashahini
November 20, 2023 10:38 am 0 comment

யாழ்ப்பாணத்தில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள கேரளா கஞ்சா, இன்று (20) அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.

காங்கேசந்துறை கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் காரைநகர் சாம்பலோடை சிவகாமி அம்மன் ஆலய வீதியில் உள்ள பற்றைக்காட்டில் இருந்து 101 கிலோ 750 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. அவற்றின் பெறுமதி சுமார் 3 கோடி ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.

மீட்கப்பட்ட கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்.விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT