ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரின் சடலங்கள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு | தினகரன்


ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரின் சடலங்கள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு

இந்தியாவில்  பரபரப்பு
 

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரின் சடலங்கள் கண்கள், கைகள் கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

டெல்லியின் வடபகுதியில் உள்ள சாந்த் நகரில் இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதில் 7 பெண்கள், 4 ஆண்கள் அடங்குவர்.

டெல்லியின் வடக்குப்பகுதியில் சாந்த் நகர் அமைந்துள்ளது. இங்குள்ள புராரி பகுதியைச் சேர்ந்தவர்கள் பூபிந்தர் அவரின் சகோதரர் லலித் சிங். இருவரின் குடும்பத்தினரும் அப்பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இதில் பூபிந்தர் பலசரக்கு கடையும் லலித் சிங் தச்சுவேலையும் செய்து வந்தனர்.

பலசரக்குக் கடை வழக்கம்போல் காலை 6 மணிக்குத் திறக்கப்பட்டுவிடும். ஆனால் காலை 7.30 மணியாகியும் திறக்கப்படவில்லை. இதனால் அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து பூபிந்தர் வீட்டுக்கதவைத் தட்டியுள்ளனர். நீண்டநேரமாகியும் திறக்கப்படாததையடுத்து பொலிஸுக்கு தகவல் கொடுத்தனர்.

பொலிஸார் வந்து கதவை உடைத்துப் பார்த்தபோது குடும்பத்தில் உள்ள 7 பெண்கள், 4 ஆண்கள் உள்ளிட்ட 11 பேரும் இரும்பு உத்தரத்தில் தூக்கிட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களின் கண்கள், கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்தன. அவர்கள் வீட்டிலும் எந்தவிதமான கடிதமும் இருக்கவில்லை.

 


Add new comment

Or log in with...