ரூ. 70 இலட்சம் போதைப்பொருளுடன் காங்கேசன்துறை நபர் கைது | தினகரன்

ரூ. 70 இலட்சம் போதைப்பொருளுடன் காங்கேசன்துறை நபர் கைது

ரூ. 70 இலட்சம் போதைப்பொருளுடன் காங்கேசன்துறை நபர் கைது-57 Yr Old Arrested with Rs. 47 million Worth Drugs

 

ஹெரோயின், ஐஸ் மற்றும் ஹஷீஸ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (28) காலை சென்னையிலிருந்து கட்டுநாயக்க வந்த, நபர் ஒருவரின் பயணப் பொதியை சோதனை செய்த போது, ஹெரோயின் 320 கிராம், ஐஸ் 52 கிராம் மற்றும் ஹஷீஸ் 230 கிராம் ஆகியன கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

57 வயதான குறித்த சந்தேகநபர், காங்கேசன்துறையைச் சேர்ந்தவர் எனவும், அவரது பயணப் பொதியில் காணப்பட்ட போதைப்பெருளின் பெறுமானம் ரூபா 47 இலட்சம் எனவும், கட்டுநாயக்க பொலிஸ் போதைப்பொருள் பிரிவினர் தெரிவித்தனர்.

 


Add new comment

Or log in with...