சிறுத்தை கொலை; கைதான நால்வருக்கும் விளக்கமறியல் (UPDATE) | தினகரன்

சிறுத்தை கொலை; கைதான நால்வருக்கும் விளக்கமறியல் (UPDATE)

சிறுத்தை கொலை சம்பவத்தில் மேலும் நால்வர் கைது-Kilinochchi Cheetah Murder-6 Arrested

 

 

சிறுத்தை அடித்துக் கொல்லப்பட்ட விடயம் தொடர்பில் கைதான சந்தேகநபர்கள் நால்வருக்கும் விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நால்வரும் இன்று (25) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்கள் நால்வருக்கும் எதிர்வரும் ஜூன் 29 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் சம்பவம் தொடர்பில் நேற்றுமுன்தினம் கைதான சந்தேகநபர்கள் இருவருக்கும், ஏற்கனவே ஜூன் 29 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


சிறுத்தை கொலை சம்பவத்தில் மேலும் நால்வர் கைது

 

 

கிளிநொச்சி, அம்பாள்குளம் கிராமத்தில் 10 பேரை தாக்கி காயப்படுத்திய சிறுத்தை அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை (21) இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் நேற்றுமுன்தினம் (23) இருவர் (42, 33) கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டு, நேற்று (24) இரவு குறித்த சந்தேகநபர்களை கைது செய்ததாக அவர் தெரிவித்தார்.

கிளிநொச்சி மற்றும் தர்மபுரம் பகுதிகளைச் சேர்ந்த 22, 23, 24, 26 ஆகிய வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களை இன்று (25) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் நேற்றுமுன்தினம் (23) கைதான இருவருக்கும் எதிர்வரும் ஜூன் 29 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் குறித்த சம்பவம் தொடர்பில் இது வரை 06 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...