அருங்காட்சியக நிர்மாண விகாரம்; கோத்தாபயவிடம் 3 மணி நேர விசாரணை (UPDATE) | தினகரன்

அருங்காட்சியக நிர்மாண விகாரம்; கோத்தாபயவிடம் 3 மணி நேர விசாரணை (UPDATE)

அருங்காட்சியக நிர்மாணத்தில் மோசடி; கோத்தாபய FCID யில்-DA Rajapaksa Museum State Fund Scam-Gotabaya at FCID

 

பொலிஸ் நிதி மோசடி பிரிவில் முன்னிலையான, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷ சுமார் 3 மணி நேர விசாரணைகளின் பின்னர் அங்கிருந்து சென்றார்.


அருங்காட்சியக நிர்மாணத்தில் மோசடி; கோத்தாபய FCID யில்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷ பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

வாக்குமூலம் வழங்குவதற்காக, இன்று (25) காலை அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.

தங்காலை, வீரகெட்டியவிலுள்ள, டி.ஏ. ராஜபக்‌ஷ நினைவு அருங்காட்சியக நிர்மாணத்தில் அரச நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகள் தொடர்பிலேயே அவர் அங்கு வாக்குமூலம் வழங்க முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்யாதிருக்க உத்தரவு வழங்குமாறு, கோத்தாபய ராஜபக்‌ஷ முன்வைத்துள்ள மனுவுக்கு அமைய, குறித்த வழக்கு விசாரணை முடியும் வரை அவரை கைது செய்வதற்கான இடைக்கால தடையுத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...