சிறுத்தையை கொன்றவர்களை கைது செய்ய உத்தரவு | தினகரன்

சிறுத்தையை கொன்றவர்களை கைது செய்ய உத்தரவு

சிறுத்தையை கொன்றவர்களை கைது செய்ய உத்தரவு-Court Oredered to Arrest Killer of Cheetah

 

கிளிநொச்சியில், பிரதேசவாசிகளால் அடித்து கொலை செய்யப்பட்ட சிறுத்தை தொடர்பிலான குற்றவாளிகளை கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி - அம்பாள் குளம் பிரதேசத்தில், நேற்றைய தினம் (21) பத்து பேரை தாக்கிய சிறுத்தையொன்று பிரதேச இளைஞர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருந்தது.

குறித்த சம்பவம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களும் வீடியோ காட்சிகளும் வெளியாகிய நிலையில், குறித்த ஆதாரங்களை கொண்டு, சந்தேகநபர்களை கைது செய்யுமாறு, கிளிநொச்சி நீதிமன்றம் இன்று (22) பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளது.

சிறுத்தையை கொன்றவர்களை கைது செய்ய உத்தரவு-Court Oredered to Arrest Killer of Cheetah

இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் உடனடி விசாரணைகள் மேற்கொள்ளுமாறு, மக்கள் விடுதலை முன்னணி இன்று (22) பாராளுமன்றத்தில் கோரிக்கையொன்றை முன்வைத்தது.

குறித்த விடயம் தொடர்பிலான குற்றவாளிகளை கைது செய்வதற்கான நடவடிக்கையை உரிய அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டுமென, மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இதன்போது கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, குறித்த சிறுத்தைப்புலி 10 பேரை தாக்கி காயப்படுத்தியதால், அவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதன் காரணமாக ஆத்திரமுற்ற பிரதேசவாசிகள் மற்றும் இளைஞர்கள் அதனை தாக்கியுள்ளனர்.

சிறுத்தையை கொன்றவர்களை கைது செய்ய உத்தரவு-Court Oredered to Arrest Killer of Cheetah

குறித்த சிறுத்தையை பிடிப்பதற்காக வனஜீவராசிகள் மேற்கொண்ட முயற்சி பலனளிக்காத நிலையிலும், உரிய முறையில் அதனை பிடிப்பதற்கான உபகரணங்களை கொண்டு வராத நிலையில் பொதுமக்களுக்கும் அவர்களுக்கும் இடையிலான வாய்த்தர்க்கம் காரணமாக, தமது கடமைக்கு இடையூறு ஏற்பட்டதாகா அவர்களும் அம்முயற்சியை கைவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆயினும் குறித்த விடயம் தொடர்பில், நீதிமன்றிற்கு தமது தரப்பு விளக்கத்தை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வனஜவராசிகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

(படங்கள்: புங்குடுதீவு குறுப் நிருபர் - பாறுக் ஷிஹான்)

 


Add new comment

Or log in with...