பணம் சேகரித்து சென்ற பின்னர் தான் அரசு வர்த்தமானி வெளியீடு | தினகரன்

பணம் சேகரித்து சென்ற பின்னர் தான் அரசு வர்த்தமானி வெளியீடு

வெளிநாட்டிலிந்து வந்த 14 புலி உறுப்பினர்கள் கிளிநொச்சியில் பணம் சேகரித்துக் கொண்டு சென்ற பின்னர் அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டிருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல் காதர், ரேணுகா ஹேரத் மற்றும் மல்லிகா ரத்வத்தை ஆகியோர் மீதான அனுதாபப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

முன்னாள அமைச்சர் அப்துல்  காதர் குறித்து உரையாற்றிய அவர், யுத்தத்திற்கு முடிவு காண்பதற்காக 18 எம்.பிகளுடன் அவரும் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டார். அவர் போன்றவர்கள் இன்றிருந்தால் உணர்வு பூர்வமாக இவற்றை எதிர்கொண்டிருப்பர். அவர் அநியாயங்களுக்கு எதிராக குரல் கொடுக்கக் கூடியவர் என்றும் குறிப்பிட்டார். அவருக்கும் யுத்தத்திற்கு ஒத்துழைத்து அரசாங்கத்துடன் இணைந்த எம்.பிகளையும் கௌரவிக்கும் வகையில் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை சபையில் சமர்ப்பிப்பதாகவும் அவர் கூறினார்.

(ஷம்ஸ் பாஹிம்

 


Add new comment

Or log in with...