Friday, April 19, 2024
Home » கிளி. புதுமுறிப்பில் நன்னீர் மீன்வளர்ப்பு திட்டம் ஆரம்பம்
அமைச்சர் டக்ளஸ் தலைமையில்

கிளி. புதுமுறிப்பில் நன்னீர் மீன்வளர்ப்பு திட்டம் ஆரம்பம்

by damith
November 20, 2023 8:10 am 0 comment

நன்னீர் மீன் உற்பத்தியை மேம்படுத்துவதனூடாக உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், நன்னீர் மீன்வளர்ப்பு திட்டம் கிளிநொச்சியில் ஆரம்பமானது.

தேசிய நன்னீர் மீன் உற்பத்தியை மேம்படுத்துவதுடன், உணவு பாதுகாப்பு மற்றும் போசாக்ைக உறுதி செய்யவும், கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை வளர்க்கவும் மீன்குஞ்சுகளை வைப்பிலிடும் வேலைத்திட்டம் (19) ஆரம்பமானது.

புதுமுறிப்பு நன்னீர் மீன் உற்பத்தி பண்ணையில் காலை 8.30 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம அதிதியாக கலந்து கொண்டு திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர், வட மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், கரைச்சி பிரதேச செயலாளர், ஈழமக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள், மீனவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

நாடளாவிய ரீதியில் இத்திட்டத்துக்காக 100 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆரம்ப நிகழ்வாக 02 இலட்சம் மீன் குஞ்சுகள் 05 தொட்டிகளில் விடப்பட்டன. ஏனைய 25 தொட்டிகளிலும் மீன்குஞ்சுகளை வைப்பிலிட நடவடிக்கை விரைவில் முன்னெடுக்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT