தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் | தினகரன்


தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்

தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்-Postal Workers Strike

 

வடமாகாணத் தபால் திணைக்களப் பணியாளர்கள் உறுதிபடத் தெரிவிப்பு

தீர்வு கிடைக்கும் வரை எமது பணிப்பகிஷ்கரிப்புப்  போராட்டம் தொடருமென வடமாகாணத் தபால் திணைக்களப் பணியாளர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.

தொடர் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தபால் திணைக்களப் பணியாளர்களின் கோரிக்கைகள்  நிறைவேற்றப்படாத நிலையில் வடமாகாணத்தின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின்  தபால் திணைக்களப் பணியாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை (22) காலை முதல் யாழ். நகரிலுள்ள பிரதம தபாலகத்திற்கு முன்பாக அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர் . இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். 

தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்-Postal Workers Strike

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

தபால் திணைக்களத்தின் திருத்தப்பட்ட ஆட்சேர்ப்பு முறைமையை உடனடியாகச் செயற்படுத்து, உப தபால் அதிபராக வேலை பார்ப்பவர்களின் உரிமைகள், பாதுகாப்பை உறுதி செய் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 11 ஆம் திகதி தொடக்கம் நாடாளாவிய ரீதியில் தொடர் பணிப் பகிஷ்கரிப்பபுப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

எமது தபால் தொழிற்சங்கத்தினருக்கும், தபால்மா அதிபருக்கும் நடைபெற்ற பேச்சத்துவார்த்தைகளும் தோல்வியில் முடிவடைந்தமை எமக்கு மனவருத்தமளிக்கிறது. எங்களது கோரிக்கைகளை தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தித் தீர்வு பெற்றுத் தர வேண்டுமென்பதே பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள எம்மனைவரதும் எதிர்பார்ப்பு.

தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்-Postal Workers Strike

அந்தவகையில் தான் இன்று நாடளாவிய ரீதியில் தபால் திணைக்கள ஊழியர்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலைமையேற்பட்டுள்ளது. இதற்கமைவாக யாழ்.நகரில் முன்னெடுக்கப்படும்  மாபெரும் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த அஞ்சல் பணியாளர்கள் ஒன்றிணைந்துள்ளோம். தபால் தொழிற்சங்க முன்னணி மற்றும் அஞ்சல் தொலைத்தொடர்பு உரிமையாளர் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இதேபோன்று வவுனியாவில் நடைபெறும் போராட்டத்தில் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த  அஞ்சல் பணியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர் என்றனர்.

(செல்வநாயகம் ரவிசாந்)

வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஊழியர்கள் பேரணி!

வவுனியாவில் தபால் திணைக்களத்தின் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கையை முன்வைத்து இன்று (22) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா மாவட்ட அஞ்சல் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்ட பேரணியில் வவுனியா, மன்னார், கிளிநோச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த தபால் திணைக்களத்தின் ஊழியர்கள் பங்குகொண்டிருந்தனர்.

பன்னிரெண்டு வருடங்களாக அஞ்சல் ஊழியர்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டு வருவதாக தெரிவித்து நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்ட பேரணியில் ஐந்து தொழிற்சங்கங்கள் ஆதரவு வழங்கியிருந்தன.

தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்-Postal Workers Strike

வவுனியா பிரதான தபால் நிலையத்தின் முன்னால் ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணியானது மணிக்கூட்டு கோபுரத்தின் வழியாக பழைய பேரூந்து நிலையத்தை வந்தடைந்து அங்கிருந்து மீண்டும் கண்டிவீதி வழியாக மாவட்ட செயலகத்தை வந்தடைந்தது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களால் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டது.

தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்-Postal Workers Strike

தபால் திணைக்களத்தின் ஊழியர்களால் மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமாரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

(கோவில்குளம் குறூப் நிருபர் - கே. குணா)

 


Add new comment

Or log in with...