பொழுது போக்ைகத் தொலைத்த இன்றைய பரிதாப சிறுவர் சமூகம் | தினகரன்

பொழுது போக்ைகத் தொலைத்த இன்றைய பரிதாப சிறுவர் சமூகம்

பொழுதுபோக்கு என்பது எம் அனைவருக்கும் பொதுவான விடயமாகும். பொழுதுபோக்கு என நாம் அர்த்தப்படுத்துவது எமது ஓய்வு நேரத்தில் பொழுதைப் போக்கவும் மகிழ்ச்சியாக இருக்கவும் மேற்கொள்ளும் நடவடிக்கையாகும். பொழுதுபோக்கு என்பது நபருக்கு நபர் வேறுபடும் விடயமாகும்.

புத்தகம் வாசிப்பது, சுற்றுலா செல்வது, முத்திரை சேகரிப்பது, செல்லப்பிராணிகளை வளர்ப்பது என பலவிதமான பொழுதுபோக்குகள் காணப்படுகின்றன. அநேகமானோரிடம் வாழ்க்கைக் காலம் முழுவதும் ஒரே பொழுதுபோக்கோ அல்லது பல பொழுதுபோக்குகளே காணப்படலாம்.எமது அழுத்தம் நிறைந்த வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொண்டு வருவது பொழுதுபோக்குகளாகும். இதன் சிறப்பு என்னவென்றால் பொழுது போக்கின் மூலம் ஆத்மதிருப்தியும் கிடைப்பதோடு அறிவும் புரிந்துணர்வும் அதிகரிக்கும்.

சிறுவயதில் சிலரிடம் உள்ள பொழுதுபோக்குகள் பிற்காலத்தில் அவர்களது வாழ்க்கையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. உதாரணமாக புத்தக வாசிப்பு ஒருவரை எதிர்காலத்தில் சிறந்த எழுத்தாளராக மாற்ற வழி செய்யும். சில பொழுதுபோக்குகள் பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம். எவ்வாறாயினும் பொழுதுபோக்கின் மூலம் ஆத்மதிருப்தியும் மறைமுகமாக அறிவு வளர்ச்சியும் ஏற்படுகின்றன.

சிறு வயதில் பொழுதுபோக்குக்காக பல பொருட்களை நாம் சேகரிக்கின்றோம். அவை காலத்துக்குக் காலம் மாறுபடும். நீண்ட கால முத்திரை சேகரிப்பு மூலம் பெருமளவிலான முத்திரைகளை பலரும் தம்வசம் வைத்திருக்கின்றார்கள். சிறுவர்களின் பொழுதுபோக்குகளுக்காக பெரியவர்களும் உதவி செய்வார்கள். ரசிப்புத் தன்மையை வளர்க்கும் படைப்புகளை உருவாக்கவும் பொழுதுபோக்கு பல வழிகளில் பங்களிப்புச் செய்கின்றது.

ஆனால் தற்போதைய சமூகம் மிகவும் மாறுபட்டுள்ளது. இன்று பொழுதுபோக்கு என்றால் என்னவென்று கூட சிறுவர்கள் அறியமாட்டார்கள். அதற்காக நேரம் ஒதுக்க அவர்களுக்கு நேரமும் கிடையாது. பெற்றோர் மூன்று நான்கு வயதிலேயே பிள்ளைகளை மேலதிக வகுப்புக்கு அழைத்துச் செல்கின்றார்கள். பாடசாலை செல்லத் தொடங்கியதும் தாய்மார்களின் பரீட்சையான புலமைப் பரிசில் பரீட்சைக்கான வகுப்புகளுக்கு கன்றுகுட்டிகள் போல் அழைத்துச் செல்லப்படுகின்றார்கள். அதனால் பிள்ளைகளுக்கு பொழுதுபோக்கு பற்றி சிந்திக்க நேரம் கிடைப்பதில்லை. எமது பரம்பரையின் முன் இருந்தவர்களுக்கும் எமக்கும் பலவிதமான பொழுதுபோக்குகள் கிடைத்தன. இன்று அவ்வாறான அறிவும் சந்தோசமும் அவர்களுக்குக் கிட்டவில்லை. வாசிக்கவும் நேரமில்லை.

சூழலை ரசிக்க நேரமில்லை. முத்திரை சேகரிப்பதும் குறைந்து விட்டது. முத்திரைப் பாவனையும் தற்போது குறைந்துள்ளது. இன்று பிள்ளைகளிடம் உங்கள் பொழுதுபோக்கு என்னவென்று கேட்டால் "அப்படியொன்றுமில்லை" என்ற பதிலே கிடைக்கின்றது.

அப்படிக் கிடைத்தாலும், வலைதளப் பாவனை, முகநூல் பாவனை, உறங்குவது, தொலைக்காட்சி பார்த்தல் போன்ற பதில்களே கிடைக்கின்றன. பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு சரியான கல்வியை கற்றுக் கொடுக்கவே விரும்புகின்றார்கள். ஆகவே கல்வியிலுள்ள போட்டி காரணமாக பிள்ளைகளுக்கு ஒடிப் பாடி விளையாடுவதற்கு நேரமில்லை. பாடப்புத்தகங்களுக்கு அப்பால் புத்தகங்களை வாசிக்க வழியில்லை.

சில பெற்றோர் நேரத்தை வீணடிப்பதாகவும் என்ணுகின்றார்கள். ஆனால் அதன் காரணமாக சிறுவர்கள் சிறு வயதிலேயே மனஅழுத்தத்துக்கு ஆளாகின்றார்கள். அதேபோல் பிள்ளைகள் ஆக்கத்திறன், ரசிப்புத் தன்மை என்பவற்றிலிருந்து விலகுவதால் சர்ச்சைக்குரியவர்களாக, சுயநலவாதிகளாக மாறும் சந்தர்ப்பங்கள் உருவாகின்றன. அரசு மாத்திரமல்ல,பொதுஅறிவு அற்றவர்களாகவும் காணப்படுகின்றார்கள். சிறுவர்களும் இளைஞர் சமுதாயமும் நாட்டின் எதிர்காலமாகும்.

அனைத்து வேலைகளுக்கிடையிலும் பிள்ளைகள் விரும்பும் ஏதேனும் ஒரு பொழுதுபோக்குக்காக பெற்றோர் வழியேற்படுத்திக் கொடுக்க வேண்டும். இது குறித்து பெற்றோர் கவனமெடுப்பார்களாயின் அது பிள்ளைகளின் உடல், மன நலன்களுக்கு மாத்திரமல்ல சமூக வாழ்வையும் வெற்றிகரமாக மேற்கொள்ள வழிவகுக்கும்.

சத்யா நிர்மாணி


Add new comment

Or log in with...