ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து மீண்டும் சாதனை ஓட்டங்கள் 481 | தினகரன்

ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து மீண்டும் சாதனை ஓட்டங்கள் 481

ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து மீண்டும் சாதனை ஓட்டங்கள் 481-3rd ODI;AUSvENG-England Highest Inns Record
இங்கிலாந்து வீரர் ஜொன்னி பெர்ஸ்டோ 139 ஓட்டங்கள்


இங்கிலாந்து 242 ஓட்டங்களால் வெற்றி

சுற்றுலா அவுஸ்திரேலியா அணிக்கும் இங்கிலாந்து அணிக்குமிடையிலான ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் புதிய சாதனையொன்றை இங்கிலாந்து அணி நிலைநாட்டியுள்ளது.

ஒரு நாள் சர்வதேச போட்டியொன்றில் அணியொன்று ஒரு இன்னிங்ஸில் பெற்றுக்கொண்ட அதிகூடிய ஓட்டங்கள் எனும் ஏற்கனவே 2016 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக அதே ஆடுகளத்தில் (ஓகஸ்ட் 30) நிலைநாட்டியிருந்த தனது சாதனையை (444/3) முறியடித்த இங்கிலாந்து அணி, 6 விக்கெட்டுகளை இழந்து 481 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி, கடந்த 2016 (ஜூலை 04) இல் நெதர்லாந்து அணிக்கு எதிராக 9 விக்கெட்டுகளை இழந்து 443 ஓட்டங்களை பெற்றமையானது, குறித்த பட்டியலில் மூன்றாவது அதிகூடிய ஓட்டங்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தொடரின் மூன்றாவது போட்டி, நேற்று (19) இங்கிலாந்தின் நோட்டிங்ஹமிலுள்ள ட்ரென்ட் பிரிட்ஜில் இடம்பெற்றது.

இதில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 481 ஓட்டங்களை பெற்றது.

இதில் அதிரடியாக ஓட்டங்களைக் குவித்த, அலெக்ஸ் ஹேல்ஸ் 92 பந்துகளில் 147 ஓட்டங்களையும் (ஆறு-05, நான்கு-16) ஜொன்னி பெர்ஸ்டோ 92 பந்துகளில் 139 ஓட்டங்களையும் (ஆறு-05, நான்கு-15) பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 37 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 239 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

அந்த வகையில் இங்கிலாந்து அணி, 242 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

ஆட்டநாயகனாக அலெக்ஸ் ஹேல்ஸ் தெரிவானார்.

இங்கிலாந்து 481/6 (50.0)
அலெக்ஸ் ஹேல்ஸ் 147 (92)
ஜொன்னி பெர்ஸ்டோ 139 (92)

ஜி ரிச்சட்ஸன் 3/92

அவுஸ்திரேலியா 239 /10 (37.0)
டேவிட் வில்லி 51 (39)
மார்கஸ் ஸ்டொய்னிஸ் 44 (37)

ஆதில் ரஷீத் 4/47
மொயின் அலி 3/28

ஐந்து போட்டிகளைக் கொண்ட இத்தொடரில், இங்கிலாந்து அணி, இடம்பெற்றுள்ள 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரில் 3-0 என முன்னிலை வகிக்கின்றது.

இத்தொடரின் நான்காவது போட்டி நாளைய தினம் (21) இடம்பெறவுள்ளதோடு, ஐந்தாவதும் இறுதியுமான போட்டி எதிர்வரும் ஜூன் 24 ஆம் திகதி இடம்பெறவுள்ளமைகுறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...