அம்பாந்தோட்டை துறைமுக இறுதி கட்ட முதலீடு 584 மில். டொலர் கையளிப்பு | தினகரன்

அம்பாந்தோட்டை துறைமுக இறுதி கட்ட முதலீடு 584 மில். டொலர் கையளிப்பு

அம்பாந்தோட்டை துறைமுக இறுதி கட்ட முதலீடு 584 மில். டொலர் கையளிப்பு-China Merchant Port Handed Over USD 584 million

 

அம்பாந்தோட்டை துறைமுக முதலீட்டின இறுதி கட்டத்திற்கான முதலீட்டு தொகையினை சைனா மேர்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் (CM Port) நிறுவனத்தினால் இலங்கை துறைமுக அதிகார சபைக்கு வழங்கப்பட்டது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பொருட்டு கிடைக்கப்பெற்ற இம்முதலீடானது இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற அதி கூடிய  நேரடி முதலீடாகும். அம்பாந்தோட்டை துறைமுகத்தின் முதலாம் கட்ட முதலீட்டின் இறுதி கட்ட தொகையான அமெரிக்க டொலர் 584.19 மில்லியன் (ரூபா 93 பில்லியன்கள்) ஆகும்.

அதன் பொருட்டான காசோலை சைனா மேர்சன்ட் போர்ட் நிறுவனத்தின் இலங்கைக்காக தலைவரான ரே ரேன் இனால் இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் கலாநிதி பராக்கிரம திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இலங்கை துறைமுக அதிகார சபையின் உயர் அதிகாரிகள் மற்றும் சைனா மேர்சன்ட் போர்ட் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளும் கலந்துக் கொண்டார்கள்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மற்றும் 2018 ம் ஆண்டு ஜனவரி மாதம் செலுத்தப்பட்ட முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட தொகையான அமெரிக்க டொலர் 292 மில்லியன் (ரூபாய் 46 பில்லியன்) மற்றும் அமெரிக்க டொலர் 97 மில்லியன் (ரூபாய் 15 பில்லியன்) சைனா மேர்சன்ட் போர்ட் நிறுவனத்தினால் இலங்கை துறைமுக அதிகார சபைக்கு கையளிக்கப்பட்டது.

இத்துடன் சைனா மேர்சன்ட் போர்ட் நிறுவனத்தினால் செலுத்தப்பட்ட முதலாம் கட்ட முதலீட்டு தொகையின் மொத்த பெறுமதி  அமெரிக்க டொலர் 976 மில்லியன்களாகும். (ரூபாய் 156 பில்லியன்).

இதற்கு மேலதிகமாக இவ்வுடன்படிக்கைக்கு அமைவாக துறைமுக மற்றும் சமுத்திரவியல் செயற்பாடுகளின் பொருட்டு இரண்டாம் கட்ட முதலீடாக அமெரிக்க டொலர் 146 மில்லியன் (ரூபாய் 23 பில்லியன்கள்) பணத் தொகை இலங்கை துறைமுக அதிகார சபையில் வைப்புச் செய்வதற்கு இந்நிறுவனம் தன்னுடைய விருப்பத்தை வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் மஹிந்த சமரசிங்கவின் வழிகாட்டல் மற்றும் தலைமைத்துவத்தின் கீழ் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் செயலாக்கம் மற்றும் வினை திறனான செயற்பாட்டின் பொருட்டு இலங்கை அரசாங்கத்தின் இணக்கப்பாட்டுடன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இலங்கை துறைமுக அதிகார சபை மற்றும் சைசனா மேர்சன்ட் போர்ட் நிறுவனத்திடையே அரச மற்றும் தனியார் இணை வியாபார திட்டத்தின் கீழ் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் முகாமைத்துவம் செயற்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் அபிவிருத்திச் செய்யும் பொருட்டு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது.

கடந்த ஆண்டு டிசம்பர் 09 ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்தின் முகாமைத்துவ நடவடிக்கைகள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளின் பொருட்டு அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக குழு (HIPG) ஆகிய அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக  சேவை தனியார் நிறுவனம் (HIPS) உத்தியோகபூர்வமாக நிறுவப்பட்டு அதன் மூலமாக பயன் தரும் ஒப்பந்தமொன்றை கைச்சாத்திடுவதற்கு சந்தர்ப்பம் கிட்டியது.

இவ்விடயம் தொடர்பாக கருத்துரைத்த இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் கலாநிதி பராக்கிரம திசாநாயக்க, 'பூகோள துறைமுக துறையில் தற்போது நடைமுறையிலுள்ள நிறுவனங்களிடையே CM Port நிறுவனம்  தலைச்சிறந்த நிறுவனமாகும். அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பொருட்டு அவர்களால் மேற்கொள்ளப்பட்ட முதலீடானது இலங்கை பொருளாதார வளர்ச்சியின் மீது அவர்கள் கொண்டுள்ள அதீத நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றது.

இலங்கையை மாபெரும் சமுத்திரவியல் மத்திய நிலையமாக மாற்றியமைக்கும் HIPG, HIPS ஆகிய இவ்விரு நிறுவனங்களை ஸ்தாபித்ததன் மூலமாக அம்பாந்தோட்டை துறைமுகத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட செயற்பாடுகளின் பொருட்டு அமெரிக்க டொலர்கள் 400 மில்லியன்கள் மற்றும் 600 மில்லியன்கள் முதலிடப்பட்டது.

இம் மாபெரும் முதலீட்டின் மூலமாக இந்நாடு பெருந்தொகையான வெளிநாட்டு முதலீடுகள் கவர்வதற்கான சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.

2017 ஆம் ஆண்டு கொழும்பு துறைமுகமானது உலகிலுனள்ள கொள்கலன்களுள் 23 ஆம் இடத்தில் உள்ளதுடன் உலகிலுள்ள தலை சிறந்த இணைப்பு துறைமுகங்களில் 13 ஆம் இடத்திலுள்ளது.

இலங்கை துறைமுக அதிகார சபை 2016 ஆம் ஆண்டு ஈட்டிக்கொண்ட ரூபாய் ஒரு பில்லியன் இலாபத்திற்கு இணையாக 2017 ஆம் ஆண்டில் ரூபாய் 13.2 பில்லியன்கள் இலாபத்தை ஈட்டிக் கொண்டுள்ளது.

2018 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களிற்குள் கொழும்பு துறைமுகத்தின் பரிமாற்று கப்பற்றுறையின் வளர்சியானது 2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் நூற்றிற்கு 19.2 % வளர்சியடைந்துள்ளதுடன், இலங்கை துறைமுக அதிகார சபையின் மூலமாக நடாத்தப்படுகின்ற ஜயபாலு முனையத்தின் பரிமாற்று கப்பற்றுறையின் வளர்ச்சி 21%  ஆக வளர்சியடைந்துள்ளதுடன் , அம்பாந்தோட்டை துறைமுகத்தில் முன்னெடுக்கப்படுகின்ற இம்முதலீட்டுடன் இலங்கை துறைமுக அதிகார சபை மென்மேலும் இலாபமீட்டும்.

 


Add new comment

Or log in with...