தேசிய ஹஜ் சட்டமூலத்தை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம் | தினகரன்

தேசிய ஹஜ் சட்டமூலத்தை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம்

தேசிய ஹஜ் சட்டமூலத்தை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம்-Cabinet approval to Draft National Hajj Act-legal draftsman

 

தேசி புனித ஹஜ் சட்டமூலத்தை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (19) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முஸ்லிம் விவகாரத்திற்கு பொறுப்பான அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீமினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய அமைச்சரவையினால் இவ்வனுமதி வழங்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹஜ் யாத்திரையில் ஈடுபடுவதற்காக வருடாந்தம் சுமார் 7,000 இற்கும் 10,000 இற்கும் இடைப்பட்ட பக்தர்கள் முஸ்லிம் மத மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்கின்றனர்.

இருப்பினும் ஹஜ் யாத்திரைக்காக இலங்கைக்கு வருடாந்தம் 2,200 இற்றும் 3400 இற்கும் இடைப்பட்டடோருக்கே அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கிறது.

யாத்திரியர்கள் மற்றும் சுற்றுலாவில் ஈடுபடுவோடுரை தெரிவு செய்வது மிகவும் சிரமமாக அமைந்துள்ளதனால், ஹஜ் யாத்திரை மற்றும் அது தொடர்பிலான பணிகளை ஒழுங்குபடுத்தும் பொருட்டு, புனித ஹஜ் சட்டமொன்று தயாரிக்கப்பட வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பிலான சட்டங்களை உருவாக்குவதற்கும், அதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கும், தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் மத அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீமினால் அமைச்சரவையில் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

 


Add new comment

Or log in with...