Home » CWC 2023: தோல்வியுறாது தொடர் முழுதும் வலம்வந்த இந்தியா கிண்ணத்தை கோட்டைவிட்டது

CWC 2023: தோல்வியுறாது தொடர் முழுதும் வலம்வந்த இந்தியா கிண்ணத்தை கோட்டைவிட்டது

- 6ஆவது தடவையாக உலகக் கிண்ணத்தை வென்றது அவுஸ்திரேலியா

by Rizwan Segu Mohideen
November 19, 2023 9:34 pm 0 comment

இந்தியாவில் கடந்த ஒரு மாதத்திற்கும் அதிக காலமாக இடம்பெற்ற 2023 கிரிக்கெட் உலகக் கிண்ண சம்பியனாக, அவுஸ்திரேலிய அணி தெரிவாகியுள்ளது.

அந்த வகையில் 6ஆவது (1987, 1999, 2003, 2007, 2015, 2023) தடவையாக உலகக் கிண்ண கிரிக்கெட் சம்பியனாக, அவுஸ்திரேலியா தெரிவாகியுள்ளது.

அந்த வகையில், தொடர் முழுவதும் எந்தவொரு போட்டியிலும் தோல்வியுறாத அணியாக வலம் வந்த இந்திய அணி, இறுதிப் போட்டியான இன்று அவுஸ்திரேலிய அணியிடம் தோல்வியைத் தழுவி, கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை 3ஆவது முறை (1983, 2011) வெல்லும் வாய்ப்பை இழந்தது.

Image

அஹ்மதாபாத் மைதானத்தில் இடம்பெற்ற 2023 கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

அந்த வகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி தடுமாற்றமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது.

அந்த வகையில், ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷுப்மன் கில் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற நட்சத்திர வீரர்கள் 4 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஆட்டமிழந்தனர்.

ஆயினும் அணிக்கு கை கொடுத்த விராத் கோலி 54 (63) ஓட்டடங்களையும், கே.எல். ராஹுல் 66 (107) ஓட்டடங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

Image

அவுஸ்திரேலிய அணி சார்பில் மிச்சல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், ஜோஸ் ஹஷல்வூட் மற்றம் பெட் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி சார்பில் 137 (120) ஓட்டங்களையும், மர்னஸ் லபுசக்னே ஆட்டமிழக்காது 58 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

அந்த வகையில் அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 241 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

இந்திய அணி சார்பில் ஜெஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளையும், மொஹமட் ஷமி மற்றும் மொஹமட் சிறாஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

Image

போட்டியின் நாயகனாக, ட்ராவிஸ் ஹெட் தெரிவானார்.

Image

தொடரின் நாயகனாக 3 சதங்களுடன் 765 ஓட்டங்கள் பெற்று, 1 விக்கெட் வீழ்த்திய விராட் கோலி தெரிவானார்.

India  (50 ovs maximum)
BATTING R B M 4s 6s SR
c Head b Maxwell 47 31 44 4 3 151.61
c Zampa b Starc 4 7 21 0 0 57.14
b Cummins 54 63 99 4 0 85.71
c †Inglis b Cummins 4 3 3 1 0 133.33
c †Inglis b Starc 66 107 133 1 0 61.68
c †Inglis b Hazlewood 9 22 33 0 0 40.90
c †Inglis b Hazlewood 18 28 57 1 0 64.28
c †Inglis b Starc 6 10 9 1 0 60.00
lbw b Zampa 1 3 5 0 0 33.33
run out (Labuschagne/Cummins) 10 18 28 0 0 55.55
not out 9 8 13 1 0 112.50
Extras (lb 3, w 9) 12
TOTAL 50 Ov (RR: 4.80) 240
Fall of wickets: 1-30 (Shubman Gill, 4.2 ov), 2-76 (Rohit Sharma, 9.4 ov), 3-81 (Shreyas Iyer, 10.2 ov), 4-148 (Virat Kohli, 28.3 ov), 5-178 (Ravindra Jadeja, 35.5 ov), 6-203 (KL Rahul, 41.3 ov), 7-211 (Mohammed Shami, 43.4 ov), 8-214 (Jasprit Bumrah, 44.5 ov), 9-226 (Suryakumar Yadav, 47.3 ov), 10-240 (Kuldeep Yadav, 49.6 ov) • DRS
BOWLING O M R W ECON 0s 4s 6s WD NB
10 0 55 3 5.50 30 4 1 3 0
10 0 60 2 6.00 22 4 1 1 0
6 0 35 1 5.83 19 4 1 0 0
10 0 34 2 3.40 30 0 0 2 0
10 0 44 1 4.40 22 1 0 1 0
2 0 5 0 2.50 7 0 0 0 0
2 0 4 0 2.00 8 0 0 0 0
Australia  (T: 241 runs from 50 ovs)
BATTING R B M 4s 6s SR
c Kohli b Mohammed Shami 7 3 6 1 0 233.33
c Shubman Gill b Mohammed Siraj 137 120 166 15 4 114.16
c †Rahul b Bumrah 15 15 15 1 1 100.00
lbw b Bumrah 4 9 11 1 0 44.44
not out 58 110 133 4 0 52.72
not out 2 1 1 0 0 200.00
Extras (b 5, lb 2, w 11) 18
TOTAL 43 Ov (RR: 5.60) 241/4

Did not bat: 

Fall of wickets: 1-16 (David Warner, 1.1 ov), 2-41 (Mitchell Marsh, 4.3 ov), 3-47 (Steven Smith, 6.6 ov), 4-239 (Travis Head, 42.5 ov) • DRS
BOWLING O M R W ECON 0s 4s 6s WD NB
9 2 43 2 4.77 37 8 0 0 0
7 1 47 1 6.71 28 6 1 3 0
10 0 43 0 4.30 29 1 1 1 0
10 0 56 0 5.60 25 3 2 0 0
7 0 45 1 6.42 16 4 1 0 0

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT