Thursday, March 28, 2024
Home » நந்தவனம் பவுண்டேசன் ஏற்பாட்டில் சாதனை மாணவர்களுக்கு விருதுகள்

நந்தவனம் பவுண்டேசன் ஏற்பாட்டில் சாதனை மாணவர்களுக்கு விருதுகள்

by damith
November 20, 2023 9:38 am 0 comment

நந்தவனம் பவுண்டேசன் ஏற்பாட்டில் ஆண்டு தோறும் சாதனை மாணவர்களுக்கு விருது வழங்கி ​கௌரவிக்கப்பட்டு வருகிறது. 2023 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா கடந்த 18. 11.- 2023 அன்று தமிழ்நாடு, திருச்சி அருண் உணவகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பொறிஞர் ப. நரசிம்மன் எழுதிய நற்சுவைக் கவிதைகள், நம்மை மேம்படுத்தும் நற்பண்புகள் ஆகிய இரண்டு நூல்களும் வெளியிடப்பட்டன.

இனிய நந்தவனம் ஆலோசகர் மேஜர் டோனர் கே. சீனிவாசன் தலைமையில் நந்தவனம் பவுண்டேசன் தலைவர் நந்தவனம் சந்திரசேகரன் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் தமிழக முன்னாள் அமைச்சர் என்.நல்லுசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நூல்களை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

இவர் உரையாற்றும் போது, “மாணவர்களை சிறுவயதிலேயே இது போல ஊக்குவித்து விருது வழங்குவது பாராட்டக் கூடியது. எதிர்காலத்தில் அவர்கள் இன்னும் நிறைய சாதிக்க இது நல்ல வாய்ப்பாக அமையும். இதே போல மாணவர்களுக்கு மொழி உணர்வையும் கற்றுக்கொடுக்க

வேண்டும். தாய்மொழியில் சிந்திக்கும்போதுதான் அவர்களின் அறிவாற்றல் வளரும். அவர்களுக்குள் தன்னம்பிக்கையும் வளரும்” என்று தெரிவித்தார். திருச்சி பாட்சா பிரியாணி உரிமையாளர் அபுபக்கர் சித்திக், ஜெர்மனி தமிழருவி வானொலி நிறுவனர் நைனை விஜயன், சசிகலா விஜயன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கவிஞர் பா.சேதுமாதவன், முனைவர் ஜா.சலேத் இருவரும் நூல் ஆய்வுரை நிகழ்த்தினார்கள்.

பல துறைகளில் சாதனை புரிந்த பாடசாலை மாணவர்களுக்கு சாதனை மாணவர் விருது_ 2023 வழங்கப்பட்டது.

வி. ல. ரக்ஷ்தா (ஈரோடு), வி.ல.நந்தனராஜ் (ஈரோடு), வி.ஜெயச்செல்வன் (திருச்சி), சரக்ஷ்னா (திருச்சி), எஸ். அவினாஷ் (திருச்சி) ஆகியோர் விருது பெற்றனர்.

நந்தவனம் மக்கள் தொடர்பாளர் பா. தனபால் அனைவரையும் வரவேற்க, பொறிஞர் ப. நரசிம்மன் ஏற்புரை நிகழ்த்தினார். விழாவின் நிறைவாக நித்யா கோபாலன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT