உலகெங்கும் 68.5 மில். பேர் வீடுகளை விட்டு வெளியேற்றம் | தினகரன்

உலகெங்கும் 68.5 மில். பேர் வீடுகளை விட்டு வெளியேற்றம்

மியன்மார், சிரியா போன்ற நாடுகளைச் சேர்ந்த 68.5 மில்லியன் மக்கள் கடந்த ஆண்டில் தமது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டிருப்பதாக ஐ.நா அகதிகளுக்கான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

போர், வன்முறை போன்றவை அதற்குக் காரணங்களாக இருக்கக்கூடும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு, மிக அதிகமாக கடந்த ஆண்டு இறுதியில் வீடு இல்லாதோரின் எண்ணிக்கை இருந்துள்ளது. 2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு மூன்று மில்லியனுக்கும் அதிகமானோர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

10 ஆண்டுக்கு முன்னர், அந்த எண்ணிக்கை 50 வீதம் குறைவாக இருந்தது என்று அகதிகளுக்கான ஐ.நா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

தங்க இடமின்றி இருப்போரின் எண்ணிக்கை தற்போது தாய்லந்தின் மக்கள் தொகைக்குச் சமமாகும். கடந்த ஆண்டு மட்டும் 16.2 மில்லியன் பேர் வீடுகளைவிட்டு வெளியேற வேண்டியிருந்தது.


Add new comment

Or log in with...