புத்திக பத்திரணவுக்கு கைத்தொழில் வர்த்தக பிரதியமைச்சு | தினகரன்

புத்திக பத்திரணவுக்கு கைத்தொழில் வர்த்தக பிரதியமைச்சு

புத்திக பத்திரணவுக்கு கைத்தொழில் வர்த்தக பிரதியமைச்சு-Buddhika Pathirana Appointed as Deputy Minister of Industry and Commerce

 

கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதியமைச்சராக, புத்திக பத்திரண எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த  செவ்வாய்க்கிழமை (12) பதவியேற்ற இரு இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் ஐவர் உள்ளிட்ட 07 பேருடன் அமைச்சு பொறுப்பு வழங்க இருந்த நிலையில், அவர் வெளிநாடு சென்றிருந்ததன் காரணமாக இன்று (19) அதற்கான நியமனத்தைப் பெற்றார்.

புத்திக பத்திரணவுக்கு கைத்தொழில் வர்த்தக பிரதியமைச்சு-Buddhika Pathirana Appointed as Deputy Minister of Industry and Commerce

அவர் இன்று (19) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்திக பத்திரண, ஐக்கிய தேசிய கட்சியின், மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராவார்.

 


Add new comment

Or log in with...