2nd Test: போட்டி வெற்றி, தோல்வியின்றி நிறைவு | தினகரன்

2nd Test: போட்டி வெற்றி, தோல்வியின்றி நிறைவு

2nd Test: போட்டி வெற்றி, தோல்வியின்றி நிறைவு-2nd Test-SLvWI-Gros Islet-Match Drawn

 

  • தொடர் 1 - 0 என மேற்கிந்திய தீவுகள் முன்னிலை

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளது.

நேற்றைய (18) ஐந்தாம் நாள் ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி 296 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நிலையில் 5 விக்கெட் இழப்பிற்கு 147 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் மழையின் குறுக்கீட்டை அடுத்து, போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தது.

நேற்றைய நாளின் நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 32.3 ஓவர்கள் எஞ்சியிருந்த நிலையில் சீரற்ற காலநிலை காரணமாக போட்டி இடைநிறுத்தப்பட்டது. மேலும் 149 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் மேற்கிந்திய  தீவுகள் அணியும், 5 விக்கெட்டுகளை பெற்றால் வெற்றி என்ற நிலையில் இலங்கை அணியும் இருந்த நிலையில் போட்டி இவ்வாறு நிறைவுக்கு கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஆட்ட நாயகனாக இரு இன்னிங்ஸிலும் 13 (5+8) விக்கெட்டுகளை கைப்பற்றிய, மேற்கிந்திய தீவுகள் அணியின் ஷனொன் கேப்ரியல் தெரிவானார்.

முதல் இன்னிங்ஸ்
இலங்கை 253/10 (79.0)

தினேஷ் சந்திமால் 119 (186)*
குசல் மெண்டிஸ் 45 (83)
குசல் பெரேரா 32 (55)

ஷனொன் கேப்ரியல் 5/59
கெமர் ரோச் 4/49

மேற்கிந்திய தீவுகள் 300/10 (100.3)
டெவொன் ஸ்மித் 61 (176)
ஷேன் டோவ்ரிச் 55 (98)

லஹிரு குமார 4/86
கசுன் ராஜித்த 3/49

இரண்டாம் இன்னிங்ஸ்
இலங்கை 342/10 (91.4)

குசல் மெண்டிஸ் 87 (117)
நிரோஷன் திக்வெல்ல 62 (70)

ஷனொன் கேப்ரியல் 8/62
கெமர் ரோச் 2/78

மேற்கிந்திய தீவுகள் 147/5 (60.3)
கிரேக் பிரத்வெய்ட் 59 (172)*
ஷாய் ஹோம் 39 (115)

கசுன் ராஜித 2/23
சுரங்க லக்மால் 2/48

அதற்கமைய மூன்று போட்டிகளைக் கொண்ட தொடரில், மேற்கிந்திய தீவுகள் அணி 1 - 0 எனு முன்னிலை வகிக்கின்றது.

இத்தொடரின் மூன்றாவது போட்டி, எதிர்வரும் சனிக்கிழமை (23) பகலிரவு போட்டியாக இடம்பெறவுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணி விளையாடவுள்ள முதலாவது பகலிரவு டெஸ்ட் போட்டியாக இது அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...