2nd Test-Day 01: இலங்கை முதல் இன்னிங்ஸில் 253 ஓட்டங்கள் | தினகரன்

2nd Test-Day 01: இலங்கை முதல் இன்னிங்ஸில் 253 ஓட்டங்கள்

2nd Test-Day 01: இலங்கை முதல் இன்னிங்ஸில் 253 ஓட்டங்கள்-2nd Test SLvWI-Day 01-Stumps

 

சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, சென் லூசியாவிலுள்ள குரொஸ் ஐலட் இல் இடம்பெற்று வருகின்றது.

நேற்று (14) ஆரம்பமான தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

நான்கு மாற்றங்கள்; புதுமுக வீரர்கள் இருவர்
இலங்கை அணியில், அஞ்சலோ மெத்திவ்ஸ் தனிப்பட்ட குடும் ப விடயம் காரணமாக தொடரிலிருந்து விலகி இலங்கை வந்ததோடு, தனது விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக லஹிரு கமகே இப்போட்டியிலிருந்து நீக்கப்பட்டார். அது தவிர, கடந்த போட்டியில் விளையாடிய ரங்கன ஹேரத் மற்றும் தில்ருவன் பெரேரா ஆகிய இருவரும் இப்போட்டியில் இணைத்துக் கொள்ளப்படவில்லை.

அதற்கு பதிலாக, தனஞ்சய டி சில்வா, அகில தனஞ்சய, மற்றும் புதுமுக வீரர்களான மஹேல உடவத்த (31) மற்றும் கசுன் ராஜித (25) ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் தனது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து, 253 ஒட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில், அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் ஆட்டமிழக்காது 119 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

பந்துவீச்சில், சென்னொன் கேப்ரியல் 5 விக்கெட்டுகளையும், கெமர் ரோச் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்தது. முதல் நாளின் இறுதி இரண்டு ஓவர்களுக்கு மாத்திரம் முகம்கொடுத்த மேற்கிந்திய தீவுகள் அணி விக்கெட் இழப்பின்றி 2 ஓட்டங்களை பெற்றது.

முதல் இன்னிங்ஸ்
இலங்கை 253/10 (79.0)

தினேஷ் சந்திமால் 119 (186)*
குசல் மெண்டிஸ் 45 (83)
குசல் பெரேரா 32 (55)

மேற்கிந்திய தீவுகள் 2/0 (2.0)
கிரேக் பிரத்வெய்ட் 02 (06)
டெவொன் ஸ்மித் 00 (06)

இன்று (16) போட்டியின் இரண்டாவது நாளாகும்.

 


Add new comment

Or log in with...