புற்றுநோயை குணமாக்க, தடுக்க முடியும் | தினகரன்

புற்றுநோயை குணமாக்க, தடுக்க முடியும்

நடிகை கௌதமி உறுதி

சென்னை அடையாறு புற்று நோய் மருத்துவமனையில் புற்றுநோயில் இருந்து மீண்டு வந்தவர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி அண்மையில் நடந்தது. மருத்துவமனை தலைவர் டொக்டர் வி.சாந்தா தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் துணைத் தலைவர் டொக்டர் ஹேமந்த் ராஜ், கூடுதல் இயக்குநர் செல்வலட்சுமி மற்றும் புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக நடிகை கௌதமி பங்கேற்றார்.

புற்றுநோயில் இருந்து மீண்டு வந்தவர்கள் பேசும்போது, “சினிமா, தொலைக்காட்சி தொடர்களில் புற்றுநோய் கொடிய நோயாக தவறான முறையில் சித்தரிக்கப்படுகிறது.

புற்றுநோய் வந்தால் இறந்துவிடுவதாகக் காட்டுகின்றனர். இது மிகவும் தவறு.

இதனால் புற்றுநோய் குறித்து மக்களிடம் தவறான புரிதல் ஏற்படும். புற்றுநோயைக் குணப்படுத்த முடியும். புற்றுநோயை வென்று நல் வாழ்க்கை வாழ முடியும். அதற்கு நாங்களே சாட்சியாக இருக்கிறோம்” என்றனர்.

நடிகை கௌதமி பேசும்போது, “என்னுடைய புற்றுநோயை நானே கண்டுபிடித்தேன். புற்றுநோய் குணப்படுத்தக்கூடியது.

புற்றுநோயைத் தடுக்க முடியும். இந்தத் தகவலை நான் 15 ஆண்டுகளாக பல இடங்களில் கூறி வருகிறேன்.

புற்றுநோயில் இருந்து ஏராளமானோர் மீண்டு வந்துள்ளனர்.

புற்றுநோய் குறித்த மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கடமை எனக்கு உள்ளது” என்றார்.


Add new comment

Or log in with...