2nd Test-Day 04: இலங்கை 287 ஓட்டங்கள் முன்னிலை | தினகரன்

2nd Test-Day 04: இலங்கை 287 ஓட்டங்கள் முன்னிலை

2nd Test-Day 04: இலங்கை 287 ஓட்டங்கள் முன்னிலை; பந்தை சேதப்படுத்திய குற்றத்தை சந்திமால் மறுப்பு-2nd Test-Day 04-SLvWI-Sri Lanka Lead by 287-Chandimal pleads not guilty

 

  • பந்தை சேதப்படுத்திய குற்றத்தை சந்திமால் நிராகரிப்பு
  • டெஸ்ட் போட்டியின் பின்னர் விசாரணை

பந்தை சேதப்படுத்திய சர்ச்சை குறித்த எதிர்ப்புக்கு மத்தியில் இலங்கை கிரிக்கெட் அணியினர் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி யில் தொடர்ந்து ஆடுவதற்கு தீர்மானித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த விடயம் தொடர்பிலான குற்றச்சாட்டை, இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் நிராகரித்துள்ளார்.

இதேவேளை குறித்த குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணைகள் போட்டியின் முடிவில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செயின்ட் லூசியாவில் நடைபெற்றுவரும் ஆட்டத்தின் மூன்றாவது நாளான நேற்று முன்தினம் (16) சனிக்கிழமை பந்தை சேதப்படுத்தியதாக இலங்கை அணியினர் மீது நடுவர்களான அலீம் தார் மற்றும் இயன் கெளல் குற்றம்சாட்டியதையடுத்து போட்டி இரண்டு மணி நேரம் தாமதித்தே ஆரம்பித்தது. நடுவர்களின் இந்த முடிவை அடுத்து மைதானத்திற்கு திரும்ப தினேஷ் சந்திமால் தலைமையிலான இலங்கை அணி மறுத்து வந்தது.

இந்த குற்றச்சாட்டில் இலங்கை அணிக்கான அபராத ஓட்டமாக எதிரணிக்கு ஐந்து ஓட்டங்கள் வழங்கப்பட்டதற்கு இலங்கை அணி எதிர்ப்பை வெளியிட்டது.

இது தொடர்பில் போட்டி மத் தியஸ்தர் ஜவகல் சிறிநாத் மற்றும்

இலங்கை அணி பயிற்சியாளர் சந்திக்க ஹதுருசிங்க மற்றும் அணி முகாமையாளர் அசங்க குருசிங்க இடையே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இந்நிலையில் மூன்றாவது நாள் ஆட்டம் மாத்திரமின்றி இந்த டெஸ்ட் போட்டி ஆடப்படுவதில் சந்தேகம் ஏற்பட்டது.

எவ்வாறாயினும் இந்த குழப்பங்களுக்கு பின்னர் சேதப்படுத்தியதாக கூறப்பட்ட பந்தை மாற்றவும், போட்டியில் தொடர்ந்து ஆடவும் இலங்கை அணியினர் இணங்கினர். போட்டியை தொடர்வதற்காக மைதானத்திற்கு வந்த பின்னரும் இலங்கை வீரர்களிடையே தொடர்ந்து தயக்கம் ஏற்பட்டதோடு, அதனைத் தொடர்ந்து மேலும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றது. இதனால் திட்டமிட்ட நேரத்தை விடவும் இரண்டு மணி நேரம் தாமதித்தே மூன்றாம் நாள் ஆட்டம் ஆரம்பித்தது.

இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்ட அறிவிப்பில், இந்த விடயத்தில் தமது வீரர்களுக்கு ஆதரவு வழங்குவதாக கூறப்பட்டுள்ளது. "இலங்கை வீரர்கள் எந்த தவறான செயலிலும் ஈடுபடவில்லை என்று அணி முகாமை எம்மை அறிவுறுத் தியது” என்று இலங்கை கிரிக்கெட் சபை அறிவிப்பில் கூறப்பட்டுள் ளது.

இது பற்றி கொழும்பில் உள்ள இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகத்திடம் அறிவுறுத்தப்பட்டதாகவும் சந்திமால் மற்றும் அவரது அணிக்கு போட்டியை தொடர் வலியுறுத்தப்பட்டதாகவும் அதில் மேலும் கூறப்பட்டுள்ளது. "அணியினருக்கு போட்டியை தொடர இலங்கை கிரிக்கெட் சபை ஆலோசனை வழங்கியதோடு, எதிர்ப்புக்கு மத்தியில் ஆட்ட உணர்வை மதித்து இந்த முடிவு எடுக்கப்பட்டது" என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

தினேஷ் சந்திமாலின் சதத்தின் (ஆட்டமிழக்காது 119) உதவியோடு இலங்கை அணி முதல் இன்னிங்ஸுக்கு 253 ஓட்டங் களை பெற்றது.

இந்நிலையில் 118 ஓட்டங்க ளுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் மூன்றாவது நாளில் தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த மேற்கிந்திய தீவுகள் அணி 100.3 ஓவர்களில் 300 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. ஆரம்ப வீரர் டெவோன் ஸ்மித் (61) மற்றும் ஷேன் டவுன்ரிச் (55) அரைச்சதம் பெற்றனர்.

இலங்கை சார்பில் லஹிரு குமார 4 விக்கெட்டுகளை வீழ்த்திய தோடு, கசுன் ராஜித்த 3 விக்கெட்டு களை பதம்பார்த்தார்.

முதல் இன்னிங்ஸில் 47 ஓட்டங்கள் பின்தங் கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி, மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவின்போது ஒரு விக்கெட் இழப்புக்கு 34 ஓட்டங்களை பெற்றது.

நேற்றைய நான்காம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த இலங்கை அணி, ஆட்ட நேர முடிவில் 08 விக்கெட்டுகளை இழந்து 334 ஓட்டங்களை பெற்றது.

அதற்கமைய தற்போது இலங்கை அணி, இரண்டு விக்கெட்டுகள் எஞ்சிய நிலையில் 287 ஓட்டங்கள் முன்னிலை வகிக்கின்றது.

இன்று (18) போட்டியின் இறுதி நாளாகும்.

 


Add new comment

Or log in with...