சிறுமி கடத்தல் விவகாரம்; நகரசபை உறுப்பினர் உட்பட 8 பேருக்கு பிணை | தினகரன்


சிறுமி கடத்தல் விவகாரம்; நகரசபை உறுப்பினர் உட்பட 8 பேருக்கு பிணை

சிறுமி கடத்தல் விவகாரம்; நகரசபை உறுப்பினர் உட்பட 8 பேருக்கு பிணை-Talawakelle Child Abduction-8 Suspects Released on Bail

 

தலவாக்கலையில் சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட தலவாக்கலை - லிந்துலை நகரசபையின் தவிசாளர் அசோக சேபால உட்பட 08 பேரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, தலா ரூபா 10 இலட்சம் கொண்ட இரண்டு சரீர பிணைகளில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

தலவாக்கலையில் 05 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (18) நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, அவர்களுக்கு பிணை வழங்கிய நீதவான், வெளிநாடு செல்லவும் தடை விதித்தார்.

சிறுமியொருவரை கடத்திய விவகாரம் தொடர்பில் கடந்த 04 ஆம் திகதி, தலவாக்கலை லிந்துலை நகர சபையின் தலைவர் உள்ளிட்ட 04 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மறுநாள் குழந்தையின் தாய் உள்ளிட்ட மேலும் 04 பேர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வழக்கு தொடர்பான விசாரணை அடுத்த மாதம் 20 ஆம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

(ஹற்றன் சுழற்சி நிருபர் - கே. கிரிஷாந்தன்)

 


Add new comment

Or log in with...