7 தமிழரின் விடுதலை மனு நிராகரிப்பு: சுப்பிரமணியன் சுவாமி வரவேற்பு | தினகரன்

7 தமிழரின் விடுதலை மனு நிராகரிப்பு: சுப்பிரமணியன் சுவாமி வரவேற்பு

ராஜீவ் கொலை வழக்கு தொடர்பாக ஏழு தமிழர்களின் விடுதலை கோரிய மனு ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வரவேற்றுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உட்பட 7 பேர் 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலேயே இருக்கின்றனா்.இதனால் அவர்களைக் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு மத்திய உள்துறை அமைச்சுக்கு கடிதம் எழுதியிருந்தது.

தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்த நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார்.மத்திய உள்துறை அமைச்சின் ஆலோசனைப்படி இந்த நிராகரிப்பு நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.இதுகுறித்து டுவிட்டரில் சு.சாமி கூறுகையில்,தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றியது சட்ட விரோத தீர்மானம்.அதை ஜனாதிபதி நேரடியாகவே தள்ளுபடி செய்துவிட்டார்.

தூக்கில் இருந்து தப்பியுள்ள கொலையாளிகள் அதிர்ஷ்டசாலிகள்.இத்தாலியில் முக்கிய குற்றவாளி வசித்து வருகிறார். அவர் தீவிர உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...