1st Test-Day 03: மேற்கிந்திய தீவுகள் 360 ஓட்டங்கள் முன்னிலை | தினகரன்

1st Test-Day 03: மேற்கிந்திய தீவுகள் 360 ஓட்டங்கள் முன்னிலை

1st Test-Day 03: மேற்கிந்திய தீவுகள் 360 ஓட்டங்கள் முன்னிலை-1st Test Day 03-SLvWI

 

சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, ட்ரினிடாட் இலுள்ள போர்ட் ஒப் ஸ்பெய்ன் விளையாட்டரங்களில் இடம்பெற்று வருகின்றது.

போட்டியின் நேற்றைய (08) மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில்,  தனது இரண்டாம் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணி, 4 விக்கெட்டுகளை இழந்து 131 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஏற்கனவே மேற்கிந்திய தீவுகள் அணி, முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை இழந்து 414 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது.

பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நேற்றைய தினம் தேநீர் இடைவேளைக்கு முதல் சகல விக்கெட்டுகளையும் இழந்து, 185 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

அதற்கமைய, 229 ஓட்டங்கள் பின்தங்கியநிலையில் காணப்படும் இலங்கை அணியை, தொடர்ந்து இரண்டாம் இன்னிங்ஸை தொடருமாறு பணிப்பதற்கு வாய்ப்பு இருந்த போதும், மேற்கிந்திய தீவுகள் அணி, தனது இரண்டாம் இன்னிங்ஸை தொடர முடிவு செய்தது.

அதன் அடிப்படையில் 229 ஓட்டங்கள் முன்னிலை வகிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணி, நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக மேலும் 131 ஓட்டங்களைப் பெற்றதன் மூலம், இலங்கை அணியிலும் 360 ஓட்டங்கள் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்று (09) போட்டியின் நான்காம் நாள் ஆகும்.

முதல் இன்னிங்ஸ்
மேற்கிந்திய தீவுகள் 414/8d
ஷேன் டோவ்ரிச் 125*
ஷாய் ஹோப் 44

லஹிரு குமார 4/95

இலங்கை 185/10
தினேஷ் சந்திமால் 44
நிரோஷன் திக்வெல்ல 31

மிகேல் கம்மின்ஸ் 3/39

இரண்டாம் இன்னிங்ஸ்
மேற்கிந்திய தீவுகள் 131/4
கீரன் பவல் 64*
ஷேன் டோவ்ரிச் 11*

லஹிரு குமார 2/28
 


Add new comment

Or log in with...